தேவனுக்கு கீழ்படிந்திருங்கள் . பிசாசுக்கு எதிர்த்து நில்லுங்கள் அப்பொழுது அவன் உங்ளை விட்டு ஓடிப்போவான் (யாக் 4:7)
பிசாசு என்றால் என்ன? ஏன் நாம் அதற்கு எதிர்த்து நிற்கவேண்டும்.?
இக்கேள்ளிகள் இரண்டிற்கும் சரியான விடைநாம் கண்டுபிடித்தால் மட்டும்தான் ஒரு நல்ல கிறிஸ்தவனாக நாம் வாழமுடியும்.பிசாசு என்பதன் மறுபெயர் குற்றம் சாட்டுபவன்,அல்லது பழிசுமத்த பவன் என்பதாகும். விழுந்துபோன தூதனாகிய பிசாசின் பிரதான வேலை மனிதனுக்கும் கர்த்தருக்கும் பிரதான எதிரியாக இருப்பதேயாகும். பிசாசு என்பது அவனது பொதுவான பெயராகும்.அவன்கெட்ட ஆவியாகவே இருக்கிறான்.அவன் குற்றம் சுமத்து பவனாகவோ அல்லது ஏமாற்றுபவனாகவோ இருக்கிறான். “கெட்ட ஆவி (டெவில்)என்றசொல் கிரேக்கசொல்லில் இருந்து வந்த்தாகும். இதன் அர்த்தம் “ஒருபொய்ச்சாட்சி “ அல்லது “தொல்லை தரும் குற்றம் சாட்டுபவர்“ என்பதாகும்.
சாத்தான் பலபெயர்களால் அழைக்கப்படுகிறான். அவையாவன.
1.பழைய பாம்பு:- (வெளி. 12:9, 20 : 2) பிசாசு பாம்பிற்கூடாக ஏவளைச்சோதித்த்து.(ஆதி. 3: 1-6)
2.கெட்டவன் அல்லது தீமையானவன் :- (மத. 6: 13, 13: 19, 38: 1,யோவான. 2: 13)இந்தசொற்றொடர் பிசாசின் அடிப்படைக் குணத்தைவெளிப்படுத்துகிறது. அவன் கர்த்தரையும் அவர்செய்ய விபும்புவதையும்நேரடியாக எதிர்க்கின்றான். அவனே சகலவிதமான ஒழுக்கக் கேடான செயற்பாடு களுக்கும், அசுத்தச்செயல்களுக்கும் காரணரானவன். அதனாலேயே அசுத்தமான வனிடமிருந்து எங்களைக் காப்பாற்றும் என்று வேதம்கூறுகிறது. பிசாசிடமிருந்து விடுதலை மனிதகுலத்திறகு மிக அவசியமாகவுள்ளது.”கெர்ச்சிக்கிற சிங்கம்போல் எவனை விழுங்கலாமென்று வகைதேடிச் சுற்றித் திரிகிறான்.”( 1பேதுரு 5:8 )
3.பகைவன் :- ( மத். 13:25, 28, 39) பிசாசானவன் எங்களின் பயங்கர பகைவனாகும்.இந்த எதிரியின்மீது அன்புவைக்கவேண்டாமென்று இயேசுகூறுகின்றார். அவன் இயேசுவிற்கு, சபைக்கு, அத்துடன் சுவிஷேசத்திற்கு எதிரானவன், அத்துடன் நல்லவிடயங்களைவேரோடு பிடுங்கிகெட்ட விதையை விதைப்பதற்கு ஓய்வின்றி முயற்சிசெய்துகொண்டேயிருக்கின்றான்.
4.கொலைகாரன்:- ( யோவான். 8:44 “அவன்ஆரம்பம்முதல்கொரலை பாதகனாவே காரனாகவே யிருக்கிறான்” என்றகடினமான வார்த்தைகள் இயேசுவின் வாயிலிருந்து வருகின்றன. பிசாசு ஆபேலையும் தீர்க்கதரிசிகளையும் கொலை செய்தவன்.அத்தடன் இயேசுவையும் அவரதுநேரத்திற்கு முன்கொலைசெய்ய விரும்பியவன்( யோவான் 8:40 )
5.ஏமாற்றுக்காரன் :- (வெளி. 20:10) ஏவாள்தொடங்கி சகல மனித வர்க்கத்தினரையும் பிசாசு ஏமாற்றிக்கொண்டேயிருக்கின்றான்பொல்லாத மனிதர்கள் மோசம் போக்கிற வர்களால் மேலும் மோசமாகிக் கொண்டே போகிறார்கள்.(2.தமேத் 313),
6.பிசாசுகளின் தலைவன்:-( மத் 934, 12: 24) மூன்ற முறை பிசாசை “உலகத்தின் அதிபதி” என்று கூறியுள்ளார்.” என்னை வணங்கினால் இந்த உலகத்தைத் தருவேன் என்று பிசாசு இயேசிவிடம் கூறினான்.(லூக்கா 4: 5-7) ஆனால் இயேசு அந்த வார்த்தைளை நிராகரித்து “ அப்பலேபோ சாத்தனே “ என்ற கூறினார்.(4:8) கல்வாரியில் இந்த உலகத்தின் அதிபதியின் மரண அடியை இயேசு சந்தித்தார்.இது காலத்தின்தேவையாக விருந்தது ஆனால் உலகத்தின் முடிவிற்குமுன் கர்த்தர் இறுதியாகவெற்றியடைவார்.(1யோவான். 3: 8.மத் 25 :41,வெளி 12: 7)
பிசாசு வல்லமையானவன், ஆனால் கிறிஸ்தவர்கள் கர்த்தருக்குள்ளாக அதிக வல்லமையானவர்கள்.( எபேசிய6: 11, ) அவனுடைய அடிகளை தடுப்பதற்கு கிறிஸ்தவர்களுக்கு பாதுகாப்புத்தேவை.பிசாசுசோதிக்கிறான், ஆனால் கர்த்தர் தப்பிப் போகிதற்கு வழியையும் உண்டாக்குவார். (1கொரி. 10 :13), ஜனங்ளைத் மோசம் போக்கு வதற்கு பிசாசு வகைதேடித் திரிகின்றான்.(2கொரி. 2 : 11) ஆனால் எதிர்த்து நின்றால் பிசாசு ஓடிப்போவான். (யாக. 4 :7) பிசாசு பயப்படமாட்டான், இந்த ஏமாற்றும் அசுத்னைவிட இயேசு அதிக வல்லமைகொண்டவர்.( 1யோவா. 4 : 4)
7.சாத்தான் :- கடவுளுடையதும், மனிதகுலத்தினதும் பெரிய சத்துரு, அல்லது துஷ்டன் என்பது பிசாசினுடைய சொந்தப்பெயராகும்.
சாத்தான் எனபது எபிரேயமொழியில் மனிதனின் எதிரி என்று சிலசமயங்களில் பொருள்படும். ( 1சாமு 29 :4, சங்கீதம். 109: 6)
கர்த்தருடைய தூதன் பாலமுக்கு எதிர்து நின்றபோது இவ்வாறு அழைக்கப்பட்டார்.( எண். 22 : 22). சாத்தான் என்ற வார்த்தை பழைய ஏற்பாட்டில் பாவிக்கப்பட்ட இடமெல்லாம் கர்த்தருக்கும், மக்களுக்கும்,பெரிய சத்துரு என்று பெயர்பெறும்.(1 நாளாக.21 :1,யோபு 1-2) இந்த வார்த்தை இடையிடையே புதிய ஏற்பாட்டிலும் வருகிறது.
புதிய ஏற்பாட்டில் சாத்தானுக்குப் பதிலாகப் பயன்படுத்தப் பட்ட மற்றமொருபெயர் “ பிசாசு” வாகும், இதனுடைய அர்த்தம் “ அவதூறுபேசுபவன்” அல்லது “பொய்க் குற்றம் சுமத்துபவன்” என்பதாகும். புதிய ஏற்பாட்டில் இன்னுமொருபெயரில் சாத்தான் தன்னை அறிமும்செய்யும்பெயராவது “சோதனைக் காரன் “( 1தொச. 3:5,) “பெயலசெபூ” ( மத. 12: 24) “பொல்லாங்கன்”,( மத். 13: 19, 38 ), “உலகத்தின்அதிபதி”(யோவான் 12: 31), “இப்பிரபஞ்சத்தின்தேவன் “ (2கொரி. 4 :4), “பேலியாள்”( 2கொரி. 6:15), “ஆகாயத்து அதிகாரப் பிரபு”
( எபேசி. 2:2), “ குற்றம் சாட்டுகிறவன்”(வெளி. 12:10)
சரித்திரம்:- முதலாவது மனிதகுலத்து ஜோடிகளாகிய ஆதாமையும் ஏவாளையும் பாம்பின் வடிவில் வந்துசோதித்தான் என்று ஆதியாகம்ம் 3இல் வாசிக்கிறோம். பாம்பு சாத்தான் தான் என்றுவெளிப்படுத்தல் புத்தகத்தில் வாசிக்கியோம். ( வெளி. 12 :9, 20:2).
இரண்டு பழைய ஏற்பாட்டு பகுதிகள் – ஏசாயா 14: 12-15 , எசேக்கியேல் 28: 11-19 என்பன சாத்தானின் சரியான நிலைப்பாட்டை வெளிப்படுத்தும் வகையில் தெளிவாகவும் வீழ்ந்து போன தற்கான சரியான விளக்கத்தையும் கொடுக்கின்றன இவைகள் பாபிலோன் நாட்டினதும், தீருவின் (Tyre) நாட்டினதும் ராஜாக்களுக்குத்தான் கூறப்பட்டன. ஆனால் ஆராச்சியாளர்கள் இவைகள் சாத்தானுக்குத்தான் கூறப்பட்டதாக நம்புகிறார்கள்.
சாத்தானின் திய வேலைகள் குறித்துவெளிப்படுத்தல் 12 இல்மேலும் கூறப்பட்டுள்ளது. கர்த்தருடைய அன்பிலிருந்து வீழ்ந்தவுடன், சாத்தான் மூன்றிலோரு தூதர்களை புரட்சி செய்வ தற்கு தன்னுடன் இணங்கவைத்தான்.(வெளி. 12: 3-4). பழைய ஏற்பாடு முழுவதும் அவன் மேசியாவின் வழிகளை அழிப்பதற்குப் பார்த்தான். மேசியா மனிதனாக வந்தபோது சாத்தான் அவரை இல்லாதொழிக்ப் பார்த்தான்.(வெளி 12: 4-5) உபத்திரப காலத்திற்கு முன்பாக, மேசியாவின் இரண்டாம் வருகைக்கு முன்பாக , சாத்தான் வானமண்டலத்திலிருந்து தள்ளப்படுவான். (வெளி. 12: 7-12) அப்போது சாத்தான் தனது கடுஙுகோபத்தைமேசியாவின் மக்கள்மீது காண்பித்தான்.(வெளி. 12: 13-17)வெளிப்படுத்தல் 20ம் அதிகாரம் சாத்தானுடைய கடைசி முயற்சியைக் காண்பிக்கிறது. அவன் ஆயிரம் வருடங்கள் கட்டிவைக்கப்பட்டு பின்பு அக்கினியும் கந்தகமுமான கடலிலே தள்ளப்படுவான். (வெளி. 20: 2, 10)
குணவியல்பு :- ஆதியில் சாத்தானுக்கு அதிக வல்லமையும் செல்வாக்கும் பதவியும் அதிகாரமும் இருந்தது. சாத்தான் அதிக அதிகாரமும் சக்தியுமுடைய பகைவன் என்று
பிரதான தூதனாகிய மீகாவேல் கூறினார்.(யூட்-9)
சாத்தானுடைய உலக சம்பந்தமான செல்வாக்கு சிறப்பாக வெளிப்படுத்தப் பட்டுள்ளது. அவனுடைய பலவிதமான பெயர்கள் உலகத்தை தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பதை வெளிப்படுத்துகிறது, “ இந்த உலகத்தின் அதிபதி யோவான் 12 :31) “ இப்பிரபஞ்சத்தின்தேவன்” (2கொரி. 4:4) “ ஆகாயத்து அதிகாரப் பிரபு” (எபேசியர் 2:2) “ உலகம் முழுவதும் பொல்ங் கனுக் குள் கிடக்கிறது “ என்று வேதம் கூறுகிறது.( 1யோவான் 5 :19 )
சாத்தான் தனது அசுத்த வல்லமயை பேய்களுக்கூடாக செயற்படுத்துகிறார் (மத்.12:24, 25:41,வெளி. 12: 7, 9) இயேசு முதன் முதலில் உலகத்திற்கு வந்தபோது மேசியாவின் தாக் குதல் சாத்தானின் இராஜ்ஜியத்திற்கு எதிராக இருந்தபடியால் பிசாசின் தாக்கம் பெரியளவில் இடம்பெற்றது .( மத். 12: 28-29, அப் 10: 38 ) இதே போன்ற, சாத்தானுடையதும் அவனது தூதர்களினதும் தோல்விக்கு காரணமாக அமையப் போகின்ற இன்னுமொரு தாக்கம் இயேசுவின் இரண்டாம் வருகைக்குமுன் எதிர்பார்க்கப் படுகின்றது.(வெளி. 9: 3-17, 12 : 12, 18:2)
சாத்தானுக்கும் அதிக அறிவுத்திறனுண்டு. இதனூடாகவே அவன் ஆதாமையும் ஏவாளையும் ஏமாற்றி அவர்களடைய உலகத்தையும் அரசாட்சியையும் அபகரித்துக்கொண்டான்.( ஆதி 1: 26, 3:1-7, 2.கொரி 11:3) அவனுடைய மதிநுட்பம் ஏமாற்றும் செயற்பாட்டை சிறப்பாக அவனுடைய விருப்பத்திற்கு ஏற்பசெய்வதற்கு உதவியாகவிருக்கிறது.
சாத்தானுடைய தனிச் சிறப்பியல்பு,கவர்ச்சி என்பன மட்டுப்படுத்தப் படவில்லை. அவனுடைய வல்லமை கர்த்தரின் கட்டுப்பாட்டிற்குள் தான் இருந்தன. (யோபு 1:12. லூக்கா 4 :6, ,தெசலோ 2 : 7-8) யோபுவை வேதனைப்படுத்துவதற்கு சாத்தான் கர்த்தரிடம் அனுமதிபெற்ற நடப்பித்த நிகழ்வுகள் தெளிவாக காட்டப்பட்டுள்ளன. (யோபு 1:1-12)
சாத்தானுக்குதேவனுடைய பிள்ளைகளைவேதனைப் படுத்துவதற்கு அனுமதிகொடுக்கப் பட்டுள்ளது (லூக்கா 13 :16, 1தெசலோனி. 2: 18, எபிரே 2 :14), ஆனால் அவர்ளை மற்றுமுழுதாகவெற்றுகொள்ளும்படிக்கு அனுமதி வழங்கப்படவில்லை. (யோவான் 14 : 30-31, 16:33)
சாத்தானுடைய தொடர் ஆசையின் ஒரு பகுதியாக கர்த்தரை தள்ளி தன்னை மற்றவர்கள் ஆராதிக்கவேண்டும் என்று மனப்பூர்வமான பேரார்வம் கொண்டிருந்தான்.( மத். 4: 8-9,வெளி 13:4,12) இந்த ஆசையின்மேல் வெறுப்படைந்து சாத்தானை கீழேவிழத் தள்ளினார்,அவன் கர்த்தருக்குச் சரியான எதிராளியாக உருவானான். அவன் “பொல்லாங்கனாயிருக்கிறான்”
( மத். 13: 19, 38 ) ஆனால்தேவனோ “ நீதி மானாயிருக்கிறார்” ( ஏசா.1 :4)
சாத்தான் குரோத இயல்புடையவன்.அவன் கர்த்தரையும் அவரது பிள்ளைகளையும் எதிர்ப்ப தற்கு முயன்றுகொண்டே யிருக்கிறான், அவருடைய சத்தியம் தளர்வடைவதில்லை.(யோபு 1:7, 2: 2, மத். 13:28) அவன் எப்போதும் நல்லவிருப்பங்களுக்கு தடையாகவேயிருக்கிறான்.(1நாளா 21 :1, சகரியா 3: 1-2) மனிதகுலத்திற்குள் பாவத்தை அறிமுகம்செய்வதே அவனதுவேயைகவிருந்த்து ( அதி 3), சாத்தான் மரணத்தின்மேல் வல்லமையுடையவனாகவிருந்தான், கிறிஸ்து தன்னுடைய உயிர்த்தெழுந்த வல்லமையின் மூலம் அந்த வல்லமையை உடைத்தெறிந்தார்.( எபிரே.2: 14-15)
பலவழிமுறைகள் :-தன்னுடைய அசுத்தவேலைகளைச்செய்வதற்கு சாத்தான் பல வழிமுறைளைக்கைக்கொள்கிறான், அவைகளில் மிகவும் சக்கிவாய்ந்த்து “மயக்கி வசப்படுத்தல் “(ரெம்ரேசன்) ( மத். 4:3, 1தெசலோ: 3:5) பல கைப்பட்ட முறைகளில் சாத்தான் மனிதர்களைச் சோதகைக் குட்படுத்தி பாவம்செய்வதற்கு வழிநடத்துகிறான். யூதாஸ் ஸ்கரியோத்திற்குச் செய்தது போல சிலவேளைகளில் நேரடியான ஆலோசனைகள் மூலம்செயற்படுத்துகிறான், (யோவான் 13: 2, 27), சிலவேளைகளில் கர்த்தருடைய தூதர்கள்போல்வேஷம் தரித்து ஏமாற்றுகிறான், ( 2தெசலோ2:9, 1யோவான் 4 :1) சிலவேளைகளில் மனிதர்களின்செந்த பலவீனங்களைப் பயன்படுத்தி பாவம்செய்யவைக்கிறான், (1கொரி. 7:5) உலக ஆட்சியையும், வல்லமையையும் தருவதாக சமரசம்செய்து இயேசுசை அவன் நேரடியாகவே சோதித் தான்,( லூக்கா 4: 5-8)
மனித வர்க்கத்தை சோதிக்கும் அதேவேளை , சாத்தான் ஏமாற்றுவதிலும் அதிக விருப்பமுள்ள வனாயிருக்கிறான்.( 1 திமேத்தி 3: 6-7. 2 தமோத். 2:26,) இயேசுக்கிறுஸ்துவின் சத்தியத்துக்கு எதிராக அவனுடைய பொய்சொல்லும் சுபாவத்தினால் எதிர்த்து நிற்கிறான்.(யோவான் 8:32, 44) பெரிய வஞ்சகமான தவறகளை அடிக்கடி பயன்படுத்துவதன் மூலம் சரியானதைப் பெற்றக் கொள்கிறான்.அவனுடைய சோதனைகளில் இந்தப் பொய்கள் தெளிவாகத் தெரியும்..( அதி.3: 4-5) ஏமாற்றக் காரனாக இருப்பதுபோல், உண்மையைப் பொய்யாக்குவதில் சாத்தான் மிகவும் கெட்டிக்காரனாக விருக்கின்றான். ( 2கொரி.11: 13-15)
சாத்தானுடைய வழிமுறகள் யாவும் சுவிஷேசத்தைசொல்லவிடாமல் தடுப்பதற்காக திட்டமிடப்பட்டதாக வேயிருக்கிறது. மத். 13: 19, 1தெசலோ.2: 17-18) சுவிஷேசம் பிரசங்கிக் கப்படும்போது அந்தப் பிரசங்கத்தின் கருத்துக்களை உணர்ந்து கொள்ள முடியாதவாறு மக்களின் மனக்கண்களை சாத்தான் கட்டிப்போடுகிறான்.(2.கொரி. 4: 3-4, 2.தெசலோ. 2: 9-10) நேரத்திற்குநேரம் குழப்பங்களைச் செய்வதன்மூலம் கர்த்தருடைய வேலையைத் தடைப் படுத்து கிறான். (யோவான். 13:2, 27, பேதுரு.5:8,வெளி. 12:13-17) மனிதர்களை வேதனைப்படுத்துவ தன்மூலம் உலகத்தில் ஒழுங்கின்மையைக் கொண்டுவருகின்றான்.(யோபு.1-2: 2கொரி. 12:7, எபி.2:14). தனது பிள்ளைகளைத் திருத்தும் நோக்கத்திற்காக கர்த்தர் அவர்களை வேதனைப் படுத்தும்படி சாத்தானுக்கு சிலவேளைகளில் அனுமதிகொடுக்கின்றார்.( 1 திமே. 1: 20) இயேசுக்கிறிஸ்துவின் பாவமற்ற வாழ்க்கை எதிரியை திரும்பத்திரும்ப தோல்வியடையச் செய்வதில் இந்தச் சம்பவமே உச்சக்கட்டமாக விருந்த்து.( மத். 4: 1-11, லூக்கா 4: 1-13)
தோல்வி:-தன்னுடைய கர்த்தருக்கெதிரான யுத்தத்தில்தோல்லியடையும்படி சாத்தான் முன் குறிக்கப் பட்டுள்ளான். அவனுடைய இறுதி முடிவு புதிய ஏற்பாட்டில் முன்னுரைக்கப் பட்டுள்ளது.( லூக்கா 10:18,யோவான். 12:31, வெளி. 12:9, 2010)இயேசுக் கிறுஸ்துவின் சிலுவை மரணம்சாத்தானுடையதோல்வியின் அடித்தளமாக அமைகின்றது.(எபி. 2: 14-15, 1பேது 3:18,22 ) இயேசுக்கிறிஸ்து மீண்டும் வந்து சாத்தானை அக்கினியும் கந்தகமும் எரியும் கடலுக்குள் தள்ளும்போது இறுதிமுடிவுவரும்.(வெளி.20: 1-15)
கிறிஸ்தவர்களுக்கு பாவத்தின்மீது வெற்றி கொள்வதற்கு கிறிஸ்துவின் மரணம் பலமான வழியாக அமைகின்றது. “சமாதானத்தின்தேவன் உங்களுடைய காலின்கீழ் சாத்தானை நசுக்குவார்” என்ற உறுதிமொழி கொடுக்கப்பட்டுள்ளது.(றோம. 16:20) எங்களுடைய சொந்த வெற்றியானது சாத்தானுடைய சோதனைக்கு எதிர்த்து நிற்பதிலேயே தங்கியுள்ளது.( பேசி 4: 25-27, 1பேதுரு. 5: 8-9).
இயேசுக் கிறுஸ்துவின் இரத்த்த்தின் வல்லமையால் கிறிஸ்தவர்கள் சாத்தானின் போராட்டத் திலிருந்து வெல்ல முடியும்.(வெளி. 12:11), பரலேகத்தில் கிறிஸ்தவர்களுக்காக இயேசு பரிந்து பேசிக் கொண்டேயிருக்கிறார், இதனால்வெற்றி கிடைக்கிறது( எபி.7: 25), பரிசுத்த ஆவியின் வழிநடத்தலினால் வெற்றி கிடைக்கிறது,( கலா. 5: 16) அத்துடன் பலதரப்பட்ட சர்வ ஆவியின் ஆயுதங்கள் மூலம்வெற்றி கிடைக்கின்றது( எபேசி. 6: 13-18)
உண்மை நிலை:- சாத்தான்போன்ற எதிரிகளை அனுமதிப்பதால் சிலபேருக்குதொல்லைகள் ஏற்படுகின்றன. ஆனால் அவனுடைய பிரசன்னமும்செயற்பாடுகளும் பிசாசின் தொல்லை களையும் பிரச்சனைகளையும் விளங்கப் படுத்துவதற்கு அவசியமானதாகும். ஆனால் வேதாகமம் சாத்தான் இருக்கிறான் என்பதையும், கர்த்தர் மனிதர் களுக்குச் செய்யும்செயற்பாடு களுக்கு எதிராகச் செயற்படுதும் அவனுடைய பிரதான வேலையாகும். அனேகர் சாத்தானை ஏன் ஆண்டவர் அனுமதித்தான் என்று அதிசயப்படுகிறார்கள். இந்தக்கேள்விக்கான சரியான பதில் இன்னமும் கிடைக்கவில்லை.
ஒரு சிறந்த ஊழியக்காரனின் கும்பத்தில் எப்படி சாத்தான் குழப்பங்களை உண்டுபண்ணினான் என்ற உண்மைக் கதயை நான் கீழே தருகிறேன் அதை மிகுந்த அவதானத்துடன் வாசித்து சாத்தானின் தந்திரங்களை அறிந்து அவனுக்கு எதிர்த்து நின்று வாழ் கையில்வெற்றியடையுமாறுவேண்டுகிறேன்.
கரோலினுடைய கதை
“எட், நீங்கள்நேராக வீட்டுக்கு வந்து விடுங்கள் “ என்று எனது மனைவியின் குரல் தூரத்திலிருந்து தொலைபேசியூடாகத்தொனித்தது. “நீங்கள் இல்லாத வேளையில் கரேலினுடைய நடவடிக்கைகள் மிகவும் வித்தியாசமாகவும் கவலைக்கிட மாகவுமுள்ளது” கடந்த இரவில் நான் அவளுடன் இருந்தபோது , ஒரு பிசாசு அவளுடைய கண்களுக்கூடாக என்னைப் பார்த்ததை நான் அவதானித்தேன் “
“ஒரு பிசாசு “ நான் திகைத்துப்போனேன். “ அது நடக்க முடியாத காரியம், ஒரு கிறிஸ்தவனுடைய வாழ்க்கையில், கிறிஸ்தவர்களை பிசாசு பிடிக்க முடியாது” .
“லொறட்றா சொன்னாள் அவள் ஒரு கிறிஸ்தவப்பெண் என்று எனக்குத்தெரியும்,” கிறிஸ்தவர்களை பிசாசு பிடிக்காதென்று எனக்கும்தெரியும்”, ஆனால் ஒரு பிசாசு அவளுடைய கண்களுக்கூடாக என்னைப் பார்த்தது. அது கரோலின் அல்ல”. என்னுடைய நான்கு பிள்ளை களில் அவள் மூத்தவள், மற்ற மூன்ற பிள்ளைகளையும் கரோலின்தான் வழிநடத்துவாள், ஒழுக்கமாக நடக்கச்செய்வாள், அத்துடன் கிறிஸ்துவுக்குள் பெலமான ஜீவியம் செய்பவள்
உண்மை தான் கிறிஸ்தவ மிஷனறி ஊழிய காலங்களில் ஏற்பட்ட முதலாவது ஒழுக்கப் பிரச்சனை இதுதான். லொறட்ராவும் நானும் ஊழியத்தில் அதிக கவனம்செலுத்தியபோது, கரோலினை நாம் கவனிக்கத் தவறியதன் காரணமாக இவ்வாறு ஏற்பட்டுள்ளது என்பதை நான் உணர்கிறேன். பிசாசுகளைப்பற்றி நான் அதிகம் கவனம்கொள்ளவில்லை, அவைகளைப்பற்றி எனக்கு அதிகமாக ஒன்றும்தெரியாது,வேத ஒழுங்கின்படி, அவைகள் இருக்கின்றன,வேதாகமக் காலங்களில் அவை அதிகசெயற்பாடுள்ளவைகளாக விருந்தன, தற்காலங்களில் அவற்றை ஊழியகாலங்களில் காணமுடிகின்றன. என்னுடைய 10 வருட ஊழியகாலங்களில் நான் அவற்றைச் சந்திக்க வில்லை.
“லொறட்றா”. நீ தவறாக சொல்லுகிறாய் என்று நான்சொன்னேன் ” கராலினை பிசாசு பிடிக்க முடியாது, ஆனாலம் என்னால் இப்போ உடனடியாக வரமுடியாது. கருத்தரங்கு முடிவடைய பல நாட்கள்செல்லும்.. “நீங்கள் உடனடியாக வீடுவந்துசேர வேண்டும் : என்று அவள் கூறினாள். நான் இதற்கு முடிவுசெய்ய முடியாது, எனதுமேலதிகாரியிடம் கதைத்து அனுமதிபெறவேண்டும்.
“ கடந்த இரவு கரோலினுடைய அறைக்கு கதைப்பதற்காகச் சென்றேன், அவள் காலைமேலே உயர்த்தியபடி நிலத்தில் கிடந்தகொண்டு மயக்கும் சக்தியுடைய இசைப்பாடல் களை கேட்டுக் கொண்டிருந்தாள் நான் அவளை அழைத்தபோதும் அவள் அதற்குச் செவி சாய்க்க வில்லை ,மெய் மறந்த நிலையில் காணப்பட்டாள்
கர்த்தருக்கும், எங்களுக்கும் முரட்டாட்டம் செய்வதைக் குறித்து அவளுடன் நான்பேசியபோது அவளுடைய முகம் எனது கண் முன்பாகவே மாற்றமடைந்தது.அவள் பிசாசைப்போல் மாற்றமடைந்தாள், தன்னைத் தனியே விட்டு என்னைவெளியே போகும்படி கூக்குரலிட்டாள். அவளுடைய கண்களில் ஒரு விதமான விளங்க முடியாத இருள்சூழ்ந்திருந்த்தை நான் கண்டேன். அந்தக் கண்களுக்கூடாக கரோலின் என்னைப் பார்க்கவில்லை, ஆனால் விளங்க முடியாத ஒருவர், பிசாசுத் தன்மைகொண்ட ஒருவர், முடிவாக அது கரோலின் அல்ல, அது நிச்சயமாக பிசாசுதான்.அவளுடைய வாயிலிருந்து வந்த வார்த்தைகள்அவளுடையவைகளல்ல, அவைகள் அசுத்தமானவை, எரிந்துவிழும் வார்த்தைகள்,இறுமாப்புள்ளவைகள், கர்த்தருக்கு எதிரானவை. நான் அவைகளுக்கு எதிராக இயேசுவின் நாமத்தினால் கட்டளையிட்டேன், அவள் திடீரென பழைய நிலைக்கு மாறினாள்.கரோலின் தன்னைக் கட்டுப் பாட்டிற்குள்கொண்டு வந்தாள். எனது மனைவியுடன் நடபெற்ற கலந்துரையாடலினால் நான் மிகவும் குழம்பிப்போனேன். நான் எனது மேலதிகாரியான போதகரிடம் இவற்றைக் கூறினேன்,கிறிஸ்தவர்கள் சில சமயங்களில் இவ்வாறு பிசாசினால் பாதிக்கப்படுவதுண்டு என்று அவர் கூறினார். இதை நான் இதற்கு முன்பு கேள்விப்பட்டதேயில்லை. என்னுடைய கிறிஸ்தவ பயிற்சிக் கலாசாலைகளில் யாரும் இதை எனக்குப் படிப்பிக்கவேயில்லை
என்னுடையமேலதிகாரி என்னை வீடுசெல்வதற்கு அனுமதிகொடுத்தார். எனது வீடுசெல்லும் வரை நான் கோபத்துடனும் பயத்துடனுமேயிருந்தேன்.என்னுடைய அன்பான மகளை பிசாசு இவ்வாறு அலைக்கழிக்கிறதே என்கின்ற கோபம், இது உண்மையாயிருந்தால் இதன் தாக்கத் திலிருந்து எப்படி மகளைக் காப்பாற்றப் போகின்றேன் என்ற பயம். என்னசெய்வது? எங்கேயிருந்து ஆரம்பிப்பது?
நான் வீட்டுக்குவர இரவாகிவிட்டபடியால் கரோலின் நித்திரைக்குச் சென்றுவிட்டாள். அவளை நித்திரையிலிருந்து எழுப்பி, அவளுடைய தாயார் சொன்ன பிரகாரம் அவளுடைய நடத்தை மாற்றங்கள் குறித்தும் பிசாசு அவளுடைய கணகளுக்கூடாகப் பார்த்த்தை க்குறித்தும் சொன் னேன். சிறிதுநேரத்தில் அவளுடைய அன்பான சுபாவம் மாற்றமடைந்து கெட்ட சுபாவ மாக மாறியது. அவள் முகம் ஒரு விதமாக மாறியது என்னைப்பார்து தன்னை தனியாக விட்டுச் செல்லும்படி குளறினாள். நான் கரோலிக்கூடாகப் பேசின பிசாசைக் கடிந்துகொண்டேன், அப்போது அவள் அமைதியானாள், அவள் கர்த்தரோடு நடக்கவேண்டிய விதம்பற்றி அவளுடன் கலந்துரையாடினேன்.உடனடியாக அவள் தனது பழைய அன்பான , கீழ்ப்படிவான சுபாவத் திற்குள் மீண்டும் வந்தாள். அப்பா “எனக்குள் என்ன நடக்குது என்று எனக்குத்தெரியாது என்று அவள்சொன்னாள்,எனக்குள் ஏதோ நடக்கிறது, அது என்னைப்பற்றிக் கொண்டிருக்கிறது, நான் அதன் பக்கமாகச் செயற்படுகிறேன். அப்பா எனக்குப் பயமாக இருக்கிறது, எனக்கு உதவி செய்யுங்கள். நான் இயேசுவை நேசிக்கிறேன், நான் சரியானதைச் செய்யவே விரும்புகிறேன், என்னிலே என்ன தவறு ஏற்பட்டுள்ளது? நானும் கரோலினும் முழங்காற்படியிட்டு ஜெபம் செய்தோம். அவள் தனது பிழைகளை, முரட்டாட்டத்தை, கீழ்ப்படியாமையை அறிக்கை செய்து ஆண்டவரிடம் குளறி மன்றாடி தனது வாழ்வில் பிரச்சனை தந்துகொண்டிருக்கும் அசுத்த ஆவியை அகற்றும்படி வேண்டிக் கொண்டாள்., அவளுடைய ஜெபத்தில் தடங்கல்கள் காணப் பட்டன, ஆனாலும் தனது வாழ்க்கையை கர்த்தரிடம் ஒப்படைத்து ஜெபம்செய்து முடித்தாள்.
அவளுடைய கழுத்தில் ஒர் சங்கிலியில் ஒருபொருளை நான் கடந்த நாட்களாக அவதானித்து வந்தேன், ஆனால் அதைப்பற்றி நான் ஒன்றும் நினைக்க வில்லை. நான் அவளுடன் ஜெபம் செய்யும்போது, அவளுக்காக நான் பிசாசை எதிர்த்து ஜெபம்செய்து கொண்டபோது, என்னுடைய கவனம் அந்தச் சங்கிலியில் உள்ளபொருள் மீது ஈர்க்கப்பட்டது, அது ஒரு நட்சத்திரம் போல் ஜொலித்துக் கொண்டிருந்த்து.
இந்த நட்சத்திரத்தை எங்கேபெற்றுக் கொண்டாய் என்று நான் கேட்டேன், அவள் தனக்குத் தந்த நண்பனின் பெயரைக் கூறினாள், எனக்கு அவனைத்தெரியும், அவன் ஒருபெயர்க் கிறிஸ்தவ னேயன்றி அர்பணித்த விசுவாசியல்ல. இந்த நட்சத்திரம் எதைக் குறிக்கிறது,? என்ற நான் அவளைக் கேட்டேன், அவள் அது தனக்குத் தெரியாது என்று கூறினாள், இது கவர்ச் சியான அதிஷ்டம் நிறைந்த நட்சத்திரம். இது இசைக் கருவிகள் தூசிபிடிக்காது பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்த உறைக்குள் இருந்தது, எல்லாச் சிறு பிள்ளைகளும் இதை அணிகிறார்கள் என்று கூறினாள்.
இது மாந்திரிகளால்செய்யப்பட்ட நட்சத்திரமாகவிருந்தது, இது ஒரு மாயவித்தை உலகத்தைச் சார்ந்த்து. அந்த நாட்களில நான் மாய வித்தைசம்பவங்களில், அதனுடைய அடையாளங்களில், அதன் செயற்பாடுகளில் அதிக அக்கறைகொள்ளவில்லை.ஆயினும் அது ஒரு கெட்டஅசுத்த அடையாளம் என்பது எனக்குத்தெரியும். அது அவளுடைய உடலுக்குநோய்வராமல் பாதுகாக்கும் தாயத்தைப்போன்றதும், அசுத்த ஆவிகளை அவளது உடலுக்குள் கொண்டுவரக்கூயதுமாகும்.
கழுத்திலிருக்கும் நட்சத் திரத்தை அகற்றிவிட்டும் இதனோடுசெயற்படும் அசுத்த ஆவிகளையும் அகற்றம் வரை உனக்கு சுதந்திரம் கிடையாது என்று கரோலினிடம் கூறினேன்.
அவள் அதனைத் தனது கழுத்திலிருந்து கழற்றி நிலத்தில் எறிந்தாள், அவள் மாயவித்தைகளை அகற்றிவிடுவேன் என்றும், துள்ளல் இசைகேட்கும் ஆசையையும், தன்னுடைய முரட்டுத்தனமான நடத்தைகளையும், சுய விருப்பங்களையும் அறிக்கைசெய்தாள். உடனடியாக பிசாசிற்கும் எங்களுக்கும்நேரடி வாதங்கள் ஏற்பட்டன. தகப்பனே அவைகள் “என்னைச் சுற்றி வருகின்றன , எனக்குப் பயமாகவிருக்கிறது “ என்று அவள் அழுதாள். “ அவைகள் எனது வாழ்க்கையில் ஒர் பிடியைவைத்திருக்கின்றன, அவைகள் என்னை விட்டு அகன்றுபோக நான் விரும்புகிறேன் “ என்று கூறினாள். தயவுசெய்து இவற்றை அகற்ற எனக்கு உதவிசெய்யும் தகப்பனே என்ற கூறினாள்.
“ எனது மகளை விட்டுவெளியேபோ என்று கட்டளையிட்டேன். உன்னுடன் வைத்துள்ள எல்லா உறவுகளையும் அவள் முறித்துக்கொண்டாள், உனது எஜமானை சிலுவையிலே வெற்றி கொண்ட எனது எஜமானாகிய கர்த்தர்ராகிய இயேசுக்கிறி ஸ்த்துவின் நாமத்தினாலும், அதிகாரத் தினாலும், வெளியேறு!, அவளைத் தனியே விடு!, கரோலினை விட்டு வெளி யேறும் படியும் மீண்டும் அவளது உடலுக்குள் வரக்கூடாது என்றும் உனக்கு கட்டளையிடு கின்றேன்.அவளது வாழ்க்கையை விட்டு வெளியேறு! அவளைத் தனியே விடு. கரோலின் உனக்குரியவளல்ல, அவள் தனது வாழ்க்கையை கர்த்தராகிய இயேசுக்கிறிஸ்துவிடம்கொடுத்து விட்டாள் என்று ஜெபித்தேன்.
சிலநிமிடங்களில் பிரச்சனைகள் ஓய்ந்தன. கரோலின் அமைதியடைந்தாள், அவள் தன்னை விடுதலையாக்கிய கர்த்தரை மிகவும் சந்தேஷத்தோடு துதித்தாள். அசுத்த ஆவி அவளை விட்டு அகன்றுவிட்டது. நாங்கள் இருவரும் கர்த்தருக்கு அவருடைய கிருபைக்காக அசுத்த ஆவிகளை அகற்றியதற்காக நன்றிசொல்லி அழுது துதித்தோம்.போர் முடிந்தது என்ற சந்தோஷத்தில் நித்திரைக்காக கட்டிலுக்குச்சென்றோம்.அதிகாலை 2 மணியளவில் கரோலின் பலத்த சத்தமாக எனது அறைக் கதவைத் தட்டினாள். தகப்பனே திருப்பவும் பிசாசுகள் வந்துவிட்டன! என்று குளறினாள், என்னைக் காப்பாற்றுங்கள், அவைகள் எனது கட்டிலின் கீழிருந்து வருகின்றன, அவை எனக்குள் மீண்டும்வர விரும்புகின்றன.
நான் அவளோடு அவளது அறைக்குள்சென்றேன், “ உன்னுடைய கட்டிலின்கீழ் என்ன வைத்திருக்கின்றாய் என அவளைக்கேட்டேன், “ . அந்த நட்சத்திரங்கள் பல நிறைந்த பெட்டியொன்ற வைத்துள்ளேன்.தயவுசெய்து அவற்றைவெளியே எடுத்து எறியுங்கள் தகப்பனே என்றாள். . “இல்லை கரோலின் நீயே எடுத்து எறி” நீயே இதைச்செய்யவேண்டும் என்ற நான் கூறினேன்.: “ உன்னுடைய விருப்பத்திலே அதனோடு இணைந்தாய், இப்போது உன்னுடைய விருப்திலேயே அதை விட்டுவெளியே வரவேண்டும்” என்றேன், தனக்குப் பயமாக்க இருக்கிறது என்றாள். ஆனால் நீங்கள் எனக்கு உதவினால் நான்செய்கிறேன் என்றாள். “ தகப்பனே எனக்காக அவற்றை அழிப்பீர்களா என்றாள். அவைகள்மேல் நான்கைபோட விரும்ப வில்லை என்றாள்.
“ இல்லை” என்று சொன்னேன் நீயே அதைச்செய்ய வேண்டுமென்றேன். ஆவியின் உலகத்திற்குத்தெரியவேண்டும் நீ தான் முழுத்தொடர்பையும் துண்டிக்கிறாய் என்று கூறினேன். நான்வெளி முற்றத்திற்குச் செல்கிறேன், ஆனால் நீயே உனக்காக இவற்றைச் செய்யவேண்டும் என்றேன்.” அவளே அதைச்செய்து முடித்தாள். அவளது அறைக்கு மீண்டும் ஒரு ஜெபம் செய்வதற்காகத் திரும்பினோம். நான் அவளுக்குச் சொன்னேன், உனது பிசாசு பிடித்த நண்பனினாலும், பிசாசின் இசைகளைக் கேட்டதினாலும் பிசாசு உன்னைத் தாக்கியது என்று விளங்கப்படுத்தினேன்.
இதன் பிற்பாடு கரோலின் பிசாசின் இசைகளைக் கேட்பதில்லை. மந்திரவித்தை காட்டு பவர்களை , குழப்பம் செய்பவர்கள், அரைகுறை ஆடை அணிபவர்கள், தீமையான பழக்க வழக்கங்களில் ஈடுபடுபவர்கள், போன்றவர்களை அடிளோடு வெறுத்தாள் ஒருவரோடும் சேருவதுமில்லை. எங்கள் வீடுகளில் நாம் அவர்களை அனுமதிப் பதுமில்லை.
நானும் எனது மனைவியும் விடுமுறை பெற்றுக்கொள்ளாமல் ஊழியத்திலேயே மிகவும் அக்கறை காட்டினோம், எங்கள் பிள்ளைகளைக் கவனிக்வில்லை. நான் ஊழியத்திற் காகவும் , கருத்தரங்குகள் நடத்து வதற்காகவும், குடும்பத்தை விட்டு அனேக தடவைகள் தூரத்திலே இருந்திருக்கின்றேன். எனது மனைவியும் ஊழிய கருத்தரங்குகள் நடத்துவதிலும், ஊழியத் திற்கு ஒத்தாசை செய்பவர்களோடு தொடர்பு கொள்வதிலும் அக்றையாகவிருந்தாள்.
தலை முடி நீளமாக வளர்த்த ஹிப்பி என்று அழைக்கப்படும் சமுதாயச் சட்டதிட்ங்களின் படி வாழவிரும்பாத இளைஞர் கூட்டத்தாரோடு எங்களுக்குத் தெரியாத ஒருவரினால் கரோலி னோடு நட்பு ஏற்படுத்தப்பட்டது. அவளது நண்பன் ஹிப்பிகளின் இசையைக்கேட்பதிலும் அதிலே மெய்மறந்த நிலைக்குச் செல்வதையும் கற்றுக்கொடுத்திருந்தார்கள். அந்த இசைகளைக் கேட்கும்போது தான் மெய்மறந்த நிலைக்குச் செல்வதை அவள் அனுபவித் திருந்தாள்.
கரோலின் அசுத்த இசைகளைக் கேட்டு மெய்மறந்த நிலைக்குச் செல்வதைக் கைவிட்டு கர்த்தரிடம் பாவ அறிக்கைசெய்து கொண்டாள். கர்த்தருக்கு அருவருப்பூட்டும் சகலவிதமாக இசைச் சாதனங்களையும் கரோலின் அழித்துவிட்டாள். இதுவே எனது கிறிஸ்தவர்களின் வாழ்வு பற்றிய பிந்திய முக்கிய உலகக் கண்ணோட்டத்தின் ஆரம்பமாகியது. உண்மையான விசுவாசிகள், வழக்கத்திற்கு மாறான பாவச் சூழ்நிலையின்கீழ், பிசாசின் பாதி கட்டுப்பாட்டின் வரக்கூடியவர்கள் யார் என்பதையும் , கண்டுகொள்ளப் பல வருடங்கள்சென்றன ஆனால் இப்படிப்பட்டவர்களை அடையாளங்கண்டு அவர்களைப் பிசாசின் பிடியிலிருந்து மீட்கும் ஊழியத்தில் நான் ஈடுபட்டுள்ளேன்.
சாத்தானும் அவனுடைய பிசாசுகளும் எங்களுக்கு மிகவும் ஆபத்தான எதிரிகள் என்பதை நாம் உன்னிப்பாக அவதானித்துக் கொண்டேயிருக்க வேண்டும். அவர்கள் உண்மையான விசுவாசிகளுக்கு, சபைகளுக்கு, மற்றும் கிறுஸ்தவ நிறுவனங்களுக்கு மிகவும் எதிரானவர்கள் என்பதை நாம் கவனத்தில்கொள்ளவேண்டும். எபேசியர். 6 : 10-20, யாக் 4: 7-8, 1பேதுரு 5: 8-11 ஆகியவற்றையும் ஆவிக்குரிய யுத்தங்கள் பற்றியும் நாம் பிழையின்றி அறிந்திருக்கலாம். இதில் முக்கிய விடயமென்னவென்றால் சாத்தானாலும் பிசாசினாலும் எங்களுக்கு எதிராக வீசப்படும் வல்லமைகளை நாம் முற்றுமுழுதாக அறிந்திருக்கிறோமா? என்பதாகும்.கர்த்தருடைய வார்த்தையை அசட்டைபண்ணும் விசுவாசிகளுக்கும், எதிராக நடக்கும் விசுவாசிகளுக்கும் சாத்தான் என்னசெய்வான் என்று உண்மையில் எங்களுக்குத்தெரியுமா?
பிசாசின் தாக்கத்தின் உண்மைத் தன்மை: வேதாகமத்தின் குறிப்புக்களும் அனுபவங்களும்.
சிலவேளைகளில் அதிக விவாதத்திற்குரிய கேள்வி என்னவென்றால். “ உண்மையான விசுவாசி பிசாசினால் தாக்கத்திற்குள்ளாவானா? இங்கு பிசாசு பீடித்தல் பற்றி நான் பேச வில்லை என்பதைக் கவனித்துக்கொள்ளுங்கள். பிசாசு பீடித்தல் என்பது ஒருவரை தனது பூரண கட்டுப்பாட்டிற்குள் வைத்துக்கொள்வதாகும். கிறிஸ்தவர்கள், கீழ்ப்படியாதவர்களும் கூட, கர்த்தருக்குரியவர்கள், சாத்தானுக்குரியவர்களல்ல. சாத்தான் அவர்களை முற்றுமுழுதாக கட்டுப்படுத்த முடியாது. எப்படியோ, பிசாசின் தாக்கம் என்பது சற்று வித்தியாசமானது. பிசாசின் தாக்கம் என்பது சாத்தான் தன்னுடைய பிசாசுகள் மூலமாகநேரடியாகத் தாக்குகின்றான், ஒரு கிறிஸ்தவனுடைய அல்லது கிறிஸ்தவனல்லாத ஒருவருடைய வாழ்க்கையில், ஒரு குறிப்பிட்ட பகுதியை தனது கட்டுப்பாட்டிற்குள் வைத்துக்கொள்ளுதலாகும்.
கிறிஸ்தவர்களுக்கு இப்படி நடக்குமா?
வேதாகமத்தின் பிரகாரமும், கிறிஸ்தவர்களின் அனுபவத்தின்படியும் இது முடியும். பிசாசு வீழ்ந்ததைப்போல் வீழ்ந்து தண்டனைக்கு உட்படவேண்டா மென்று கிறிஸ்தவர்களை வேதாகமம் எச்சரிக்கின்றது அல்லது பிசாசின் வலையில் விழவேண்டாமென்று எசரிக்கின்றது.( 1 திமேத் 3: 6-7) அவைகள் “ விசுவாசிகள் பிசாசின் பக்கம் சாய்கிறார்கள்” என்று கூறுகின்றன. ( 1 திமே. 5:15) சாத்தான் தாக்குகிறது என்று கூறுகிறது. அவர்கள் எப்படி “சாத்தானை விசுவாசத்தில் உறுதியாக எதிர்பது என்று அறியாவிட்டால்” அவர்கள் “பிசாசினால் விழுங்கப்படுவார்கள்”. (1பேதுரு 5: 8-9) இவைகள் மிகவும் கடுமையான வார்த்தைகள், சாத்தானுடைய திட்டங்களை அறியாத விசுவாசிகள் மிகவும் ஆபத்தில் விழுவார்கள் என்று பரிசுத்த பவுல் எழுதுகின்றார்.( 2கொரி. 2:11)
(Westchester, Ill.: Crossway, 1989 Murphy, Edward F.: Handbook for Spiritual Warfare. என்ற புத்தகத்திலிருந்து பெறப் பட்டவை நன்றி ).
சாத்தான் :-குற்றம் சுமத்துபவர்
சாத்தான் யார் என்பதையும், பிசாசுகள் யார் என்பதையும் அவர்களின் முக்கிய கடமைகள் யாவை என்பதையும் நாம் கட்டாயம் அறிந்திருக்கவேண்டும்.
கர்த்தரையும் அவரை உண்மையாய் ஆராதிப்பவர்களையும் எதிர்பதும் கர்த்தரைவிட்டு அவர் களை வழிவிலகச் செய்வதுமே அவனது பிரதான தொழில்களாகும்.
எங்கள் சரிரங்களை பரிசுத்தமாகவும்தேவனுக்குப் பிரியமான ஜீவ பலியாக ஒப்புக் கொடுக்க
வேண்டும். இந்த உலகத்திற்கு ஏற்றவேடம் தரியாமல்,தேவனுடைய சித்த்த்தை அறிந்து
அதன்படி செயற்படல்வேண்டும்.எங்கள் அவயவங்களை பாவத்திற்கு ஒப்புக்கொடாமல்
அவைகளை நீதியின் வழியில்செயற்படுத்தவேண்டும்.
ஆத்துமா :- கர்த்தரைப்பற்றிய சிந்தனையோடு இருத்தல்வேண்டும்.எங்கள் சிந்தனைகள் எப்போதும் தேவனுக்குப் பிரியமானவைகளாக இருத்தல்வேண்டும். (2கொரி. 10: 3-5., பிலி. 4:8.)
உணர்வுகள்:-கர்த்தர் விரும்புவதைச் செய்ய வேண்டும் ,வெறுப்பவை களை வெறுக்கவேண்டும்.
விருப்பங்கள் :- கர்த்தர் தெரிவுசெய்வதை தெரிவுசெய்யவேண்டும், கர்த்தர் தள்ளிவிடுவதை தள்ளிவிடல்வேண்டும்.
உடல் சார்ந்த ஆசைகள் :-
எங்கள் சரீரங்களை நீதிக்குப் பயன்படுத்த ஒப்புக் கொடுக்க வேண்டும்.(கலா. 5:16-21, 24, 2:20)
ஆவி:-
பரிசுத்த ஆவியோடு எங்கள் ஆவியும் ஆத்துமாவும் சரீரமும் இணைந்துசெயற்பட்டால் அவருடைய பாதுகாப்பு எல்லைக்குள் நாம் ஜீவிக்கமுடியும், எங்களுக்கு கர்த்தருடைய தூதர்கள் போக்கிலும் வரத்திலும் பாதுகாப்பு கொடுத்துக்கொண்டே இருப்பார்கள்.எங்களுடைய ஆவி பரிசுத்த ஆவியுடன் இணைந்து தேவ காரியங்களைச் செயற்படுத்திக் கொண்டு தேவனை மகிமைப்படுத்தும்.
எப்போதும் பரிசுத்த ஆவியுடன் இணைந்திருப்போமாக

- 1. அச[த்த ஆவிகளின் அரசன், கர்த்தரினதும் கிறிஸ்துவினதும் நிலையான எதிரி.
- 2. கர்த்தரிடம் நம்பிக்கையிழக்கச்செய்து பாவம்செய்யத் தூண்டுவான்.
- 3. தன்னுடைய தந்திரத்தின்மூலம் மனிதர்களை ஏமாற்றுவான்.
- 4. சுரூப ஆராதனை செய்பவர்களை அவனுடைய கட்டுப்பாட்டில்வைத்துக்கொள்ளுவான்.
- 5. அவனுடைய பிசாசுகள்மூலம் மனிதர்களைக் கட்டுப்படுத்த முடிவதுடன்,நோயினாலும் பாதிப்படையச் செய்கிறான்.
- 6. தேவனுடைய உதவியுடன் அவன் வெற்றிகொள்கிறான்.
- 7. வானத்திலிருந்து இயேசுக்கிறிஸ்து மீண்டும் வரும்போது அவன் ஆயிரம் வருடங்கள் சங்கிலியால் கட்டப்படுவான்,ஆனால் ஆயிரம் வருடங்கள் முடிந்தபின்பு இன்னும் அதிக பலத்துடன் பூமியில் உலாவுவான், ஆனால் சிறிதுகாலத்தில் நித்திய தண்டனைக்குள்ளாவான்.
- சாத்தான் ஒரு மனிதனுக்கூடாகச்செயற்பட்டு எங்களை ஏமாற்றுவான்...
சாத்தான் யார் என்பதையும், பிசாசுகள் யார் என்பதையும் அவர்களின் முக்கிய கடமைகள் யாவை என்பதையும் நாம் கட்டாயம் அறிந்திருக்கவேண்டும்.
கர்த்தரையும் அவரை உண்மையாய் ஆராதிப்பவர்களையும் எதிர்பதும் கர்த்தரைவிட்டு அவர் களை வழிவிலகச் செய்வதுமே அவனது பிரதான தொழில்களாகும்.
எங்களைச் சூழ்ந்துள்ள மூன்று மட்டத்திலான பாதகாப்புகள்.
1. பாது காப்பு எல்லை(யோபு 1-2)
2. கர்த்தருடைய தூதர்கள், (சங். 34:7, 91: 11-13, எபி. 1:14)
3. விசுவாசக் கேடயம். ( எபேசி. 6: 16)
எங்கள் சரீரம் மூன்று அமைப்புகளைக்கொண்டுள்ளது. 1. சரீரம். 2. ஆத்துமா. 3. ஆவி.
சரீரம் (றோமர் 12:1-2 றோமர் 6: 13.)எங்கள் சரிரங்களை பரிசுத்தமாகவும்தேவனுக்குப் பிரியமான ஜீவ பலியாக ஒப்புக் கொடுக்க
வேண்டும். இந்த உலகத்திற்கு ஏற்றவேடம் தரியாமல்,தேவனுடைய சித்த்த்தை அறிந்து
அதன்படி செயற்படல்வேண்டும்.எங்கள் அவயவங்களை பாவத்திற்கு ஒப்புக்கொடாமல்
அவைகளை நீதியின் வழியில்செயற்படுத்தவேண்டும்.
ஆத்துமா :- கர்த்தரைப்பற்றிய சிந்தனையோடு இருத்தல்வேண்டும்.எங்கள் சிந்தனைகள் எப்போதும் தேவனுக்குப் பிரியமானவைகளாக இருத்தல்வேண்டும். (2கொரி. 10: 3-5., பிலி. 4:8.)
உணர்வுகள்:-கர்த்தர் விரும்புவதைச் செய்ய வேண்டும் ,வெறுப்பவை களை வெறுக்கவேண்டும்.
விருப்பங்கள் :- கர்த்தர் தெரிவுசெய்வதை தெரிவுசெய்யவேண்டும், கர்த்தர் தள்ளிவிடுவதை தள்ளிவிடல்வேண்டும்.
உடல் சார்ந்த ஆசைகள் :-
எங்கள் சரீரங்களை நீதிக்குப் பயன்படுத்த ஒப்புக் கொடுக்க வேண்டும்.(கலா. 5:16-21, 24, 2:20)
ஆவி:-
- 1. மறு பிறப்படைவதற்கு முன்பு, எங்களில் ஆவி இருந்த்து, ஆனால் செத்த்தாய் இருந்தது. அதாவது கர்த்தரோடு தொடர்பில்லாமல் இருந்தது.
- 2. மறுபிப்படைதல் என்பது எங்கள் ஆவி மறுபடியும் பிறத்தலாகும். அதாவது கர்த்தருடன் தொடர்பு ஏற்படுத்தலாகும்.(1.கொரி. 6:17, 1கொரி.2: 6- 16,கலாத்.4:6, 5:16)
பரிசுத்த ஆவியோடு எங்கள் ஆவியும் ஆத்துமாவும் சரீரமும் இணைந்துசெயற்பட்டால் அவருடைய பாதுகாப்பு எல்லைக்குள் நாம் ஜீவிக்கமுடியும், எங்களுக்கு கர்த்தருடைய தூதர்கள் போக்கிலும் வரத்திலும் பாதுகாப்பு கொடுத்துக்கொண்டே இருப்பார்கள்.எங்களுடைய ஆவி பரிசுத்த ஆவியுடன் இணைந்து தேவ காரியங்களைச் செயற்படுத்திக் கொண்டு தேவனை மகிமைப்படுத்தும்.
எப்போதும் பரிசுத்த ஆவியுடன் இணைந்திருப்போமாக
No comments:
Post a Comment