நற்கிரிகைகளும் யேசுவின் மேல்வைக்கும் விசுவாசமும்.

விசுவாசம் இரட்சிப்படைவதற்கு மிகமிக அவசியமானதாகும்.ஏனெனில் வேதாகமத்தில் நற்கிரிகைகளினால் இரட்சிப்படைய  முடியாது என்று கூறப்பட்டுள்ளது. நான் சொல்லப் போகும் கதையைக் குறித்து ஒரு வரும் தவறாக விளங்கக் கூடாது.ஒரு ஊழியக்காரன் பிரசங்கம் செய்வதற்குப் போனார். தனது பாதையில் அவர் நடந்து செல்லும்வேளையில் ஒரு மலையில் ஏறினார். அதன்கீழ் கிராமங்கள் காணப்பட்டன .அதன்னருகே  காணப்பட்ட வயல்நிலங்கள் சூரிய ஒளியில்  மிகவும் அழகாக காட்சிப்படுத்தியது.
ஆனால் அவர் அந்த அழகை ரசிக்க வில்லை, அதற்குப்பதிலாக ஒரு வீட்டின் அருகே நின்று கொண்டிருந்த பெண் மீது அவரது கவனம் சென்றது. ​அந்தப் பெண் மேலே மிகவும் ஆவலுடன்  ஏறிவந்து “ ஐயா இவ் விடத்தில் எனது அலுமாரியின் திறப்பு தொலைந்து விட்டது. அதனை இவ்விடத்தில் நீங்கள் கண்டீர்களா என்றுகேட்டாள்.தான் காணவில்லை என்று   போதகர் கூறினார்.  ஆனால் என்னிடம் பரலோகம் செல்வதற்கான திறவு கோல் உள்ளது என்று கூறினார். அத்துடன் பரலோகம் செல்வதற்கான திறவுகோல் பற்றி நீங்கள் கேள்விப்பட்டுள்ளீர்களா என்று போதகர் கேட்டார். அதற்கு அவள்
நான் ஒழுங்காக ஆலயம் செல்கிறேன்,
அன்னதானம் செய்கிறேன்,
ஏழைகளுக்கு காசு கொடுக்கிறேன், உடைகொடுக்கிறேன்.
கடினப்பட்டு வியர்வைசிந்தி உழைத்துச் சாப்பிடுகிறேன்,
எங்கள் அயலவர்களுடன் நல்ல அன்பாக இருக் கிறேன்,
கடவுள் பிரியப்படும் வகையில் எனது வாழ்க்கைய்யை நடத்தி வருகிறேன், அத்துடன் அனுதினமும் ஜெபம் செய்கிறேன்.
நான் செய்யும் இந்த நற்கிரிகைகள் நான் பரலோகம்செல்ல வழிகாட்டும்  திறவுகோலாக உள்ளது என்று கூறினாள்.
அதற்குப் போதகர் அது உடைந்து போன திறப்பாகும். நீர் கற்பனைகளை உடைத்துவிட்டீர்கள். உங்களுடைய முழுக் கடமையையும் நீங்கள் செய்ய வில்லை. இது ஒரு நல்ல திறவுகோல், ஆனால் நீங்கள் அதனை உடைத்துவிட்டீர்கள். நான் எதனைச் செய்யவில்லை என்று அவள் மிகவும் பயத்துடன் கேட்டாள் எல்லா வற்றிலும் மிக முக்கியமான விடயம்  .இயேசுக் கிறிஸ் துவின் திரு இரத்தமாகும் .​பரலோகத்தின் திறவுகோல்  அவரது முள்முடி யில்லவா இருக்கிறது என்றார்.
இதை விளங்கப்படுத்தும் வண்ணமாக கிறிஸ்து மட்டுமே உனக்கு பரலோகத்தைத் திறந்து தரக்கூடியவர், உன்னுடைய நற் செய்கைகள் அல்ல. என்னை நற் கிரியைகள் பரலோகம் சேர்க்க முடியாதாயின், பரலோகம் கொண்டு சேர்க்ககூடியது எது? அப்படியாயின் எங்கள் நற்கிரியைகள் வீனானவையா? இல்லை, என்று அவர் கூறினார். விசுவாசத்திற் கடுத்த நற்கிரியைகள் சிறந்தனவாகும். நீ கிறிஸ்துவையும் அவர்சிந்தின இரத்தமும் உனது பாவங்களைக் கழுவி விட்டது என்று நம்பினால் அதற்குப்பின் செய்யும் நற் கிரிகைகள்  கிறிஸ்து வினிடம் மற்றவர்களை  அழைத்து வரும். நீ கிறிஸ்துவை நம்பாவிட்டால் நற்கிரியை என்ற உனது திறவு கோலால் பரலோகத்தைத் திறக்க முடியாது.
நற்கிரியைகள் எங்கள் பாவத்தைக் கழுவமாட்டாது. பாவம் மன்னிக்கப்ப ட்டவனே பரலோகம் செல்லமுடியும். இயேசுக் கிறிஸ்துவின் இரத்தத்தில் மட்டுமே அந்த உண்மையான திறவுகோல் உண்டு. நீ அவரை விசுவாசிப்பதன் மூலமே அந்த திறவு கோலைப் பெற முடியும். உ.ன்னில் பாவம் இல்லை என்று சொல்வாயாகில் உன்னை நீயே ஏமாற்றிக் கொள்ளுவாய், உன்னில் உண்மையில்லை, ஆகவே நீ மனம் திரும்பி இயேசுவிடம் பாவமன்னிப்பைப் பெற்றுக் கொள்ள வேண்டும். இயேசு பிதாவின் அருகில்நின்று நீ அவரது இரத்தினால் கழுவப்பட்டு சுத்த மாக்கப்பட்டவன் என்று பரிந்துபேசிக் கொண்டேயிருக்கிறார், அதனால் உனக்கு பரலோகம் எப்பொழுதும் திறந்தே காணப்படும்.
பரலோகத்திற்குரிய திறவு கோலும் நரகத்திற்குரிய திறவுபோலும் இயேசு விடமேயுண்டு. நீ யேசுவை ஏற்றுக்  கொண்டால் பரலோகம் உனக்குத்   திறக்கும், நீ யேசுவை  மறுதலித்தால் நரகம் உனக்குத்திறக்கப்படும். நீ எந்த திறவுகோலை வைத்துக் கொள்ள விரும்புகிறாய், பரலோகத்தையா? அல்லது நரகத்தையா? உன்னுடன் யேசு இருந்தால் பரகேம் நிச்சயம்,  யேசு இல்லாவிட்டால் நித்திய  நரகம் சொந்தமாகிவிடும். விசுவாசம் இல்லாமல் யேசுவோடு இணைய முடியாது.யேசுவுடன் இணைந்திருப்பதே இரட்சிப்பிற்கான முக்கிய தேவையாகும்.  இயேசுக்கிறிஸ்து இல்லாமல், என்னுடைய ஜெபத்தோடு பிதாவின் சிங்கா சனத்திற்கு முன் வந்து நான் நின்றால், எனது ஜெபத் திற்குப் பதிலை பெற்றுக் கொள்ள முடியாது. ஆனால் இயேசுக் கிறிஸ்து வைச் சுமந் தவண்ணமாக , பிதாவுக்குமுன் நிற்போமாகில் நாம் கேட்கிற எத னையும் நாம் பெற்றுக் கொள்ளமுடியும்.
இதனை ஒரு நல்ல விளக்கத்துடன் விளக்கவைக்கிறேன். நீர்வீழ்சிகளைப் பற்றி அறிந்திருப்பீர்கள். நீர்வீழ்சி பார்வைக்கு மிகவும் அழகாயிருக்கும். நீர் ஆறாகப் பெருக்கெடுத்து ஓடும்.அந்த ஆறு பல விவசாய உற்பத்திகளுப் பயன்பெறும்.மின்சாரம்பெற்றுக் கொள்வதற்கும் பயன்படும். ஆனால் நீர்வீழ்ச்சியின் மிக அருகில் ஒரு படகில் செல்வோமாகில் அது மிக ஆபத்தானதாகமுடியும். இரண்டு நண்பர்கள் ஒரு நாள் நீர்வீழ்சியின் மிக அருகில் போவதற்கு ஆசைப்பட்டு படகில்சென்றார்கள். அருகில்செல்வது மிகவும் கஸ்டமாக இருந்தது, ஆனால் விடாமுயற்சியுடன் மேலும் முன்னேறிச் சென்றார்கள். ஆனால் நீர்ச்சுழிகள் அவர்களது படகை பாறையுடன் மோதச்செய்து உடைத்து விட்டது. இருவரும் தூக்கிவீசப்பட்டு, உயிருக்காப் போராடினார்கள். கரையில் நின்ற பலர் பார்த்துக் கொண்டிருந்தார்கள். ஆனால் அவர்களால் எந்த உதவியுமே இவர்களுக்குச் செய்ய முடியாமல் போயிற்று. ஆனால் அவர்களில் ஒருவன் மிதந்து கொண்டிருந்த ஒருகயிறைக்கண்டு அதனை இறுபக் பிடித்துக் கொண்டான். ஆனால் அதே நேரம் மிதந்துவந்த பலகையைப்பிடித்த படி மிதந்துவந்த மனிதனுக் கருகாமையிலும், அந்தக்கயிறு காணப்பட்டது. சிந்தனை குலைந்த தடுமாற்றம் அடைந்த அந்த பலகையைப்பிடித்த மனிதனால் கயித்தைப்பிடிக்க மனதில்லாமல், பலகைத் துண்டயே இறுகப் பிடித் துவந்தார். இதுவே அவரது மரணம் விளைவிக்ககூடிய தவறாகும். ஆனால் இருவரும் மரணத்தறுவாயில் இருந்தார்கள். ஆனால் ஒருவர் காப்பாற்றப்பட்டார், ஏனெனில் அவர் பற்றிய கயிறு கரையில் நின்ற மனிதர்களின்கைகளில் இருந்தபடியால் அவர்கள் அவனை இழுத்து எடுத்தார்கள். அதே நேரம் மற்றவர் மரத் துண்டை இறுகப்படித்துக் கொண்டேயிருந்தார். ஆனால் அவரை அதன்பின்பு காணவேயில்லை.
இதன் அர்த்தம் விளங்குகிறதா? விசுவாசம் என்ற கயிறு இயேசுவோடு இணைந்திருப்பதால் நாம் எவ்வகையான பிரச்சனையில் மாட்டியிருந் தாலும் யேசு எங்களைக் காத்துக் கொள்ளுவார்.யேசு கரையிலே நிற்கிறார், அவரோடு பேசுங்கள், விசுவாசம் என்னும் கயித்தை இறுகப் பிடித்துக் கொள்ளுங்கள், இதனை நம்பிக்கை என்னும் கரங்களாலே இறுக ப்பற்றிப் பிடித்தால், அவர் எங்களைக் கரையில் இழுத்துச் சேர்ப்பார். ஆனால் எங்களுடைய நற்கிரிகைகள், கிறிஸ் துவுடன் தொடர் பில்லாதவைகளாகும், அவை அழிவில் கொண்டு சேர்க்கும். நாங்கள் அதனை எவ்வளவுதான் இறுகப்பற்றிக் கொண்டாலும் அவை எம்மை பரலோகம் சேர்க்க மாட்டாதவையாகும்.
இன்னும் ஒரு உவமையை உங்களுக்குச் சொல்ல விரும்புகிறேன். மணவாளன் வருகிறார் என்ற அழைப்புக் கிடைத்தவுடன் அவரை அழைப்பதற்காக 5 புத்தியுள்ளபெண்களும்,மேலும் 5 புத்தியில்லாதபெண்களும் சென்றார்கள். அவர்கள் 10 கன்னிகைகளும் தங்கள் தீவெட்டியுடன் மணவாளனை  அழைப்பதற்காகச் சென்றார்கள். அவர்களுள் புத்துயுள்ளவர்கள்  தங்கள்கைகளில் ஒரு பாத்திரத்தில் எண்ணெய் கொண்டுவந்தார்கள். மற்றய புத்தியில்லாத 5 கன்னிகைகளும்  எண்ணெய் கொண்டுவராமலே மணவாளனை  அழைக்க வந்தார்கள்.
மணவாளன் வர காலமாகும் என்பதால், எல்லோரும் உறங்கிவிட்டார்கள். ஆனால் நடுச்சாமத்தில் மணவாளன் வருகிறார் என்ற சத்தம் கேட்டவுடன் புத்தியுள்ள கன்னிகைகள் தங்கள் தீவெட்டிக்கு எண்ணெய் விட்டுவெளிச்சத்துடன் மணவாளனை வரவேற்றார்கள்.
ஆனால் புத்தியில்லாத 5 கன்னிகைகளும் எண்ணெய் கடன் கேட்டும் ஒருவரும் கொடுக்காதபடியால், கடைகளை நோக்கி ஓடினார்கள்.அவர்கள் எண்ணெய்வாங்கியபின் ஓடிவந்து பார்க்கும்போது மணவாளனின் கதவு மூடியிருந்தது. அவர்கள் கதவைப்பலமுறை தட்டிய போதும் கதவு திறக்கப்படவில்லை.
இங்கு கதவு திறப்பதற்கு பரிசுத்த ஆவியின் நிறைவு மிக அவசியம் எனப் புலப்படுகின்றது. அதாவது  கிறிஸ்தவர்களாகிய நாம் அனைவரும் பரிசுத்த ஆவின் அபிஷேகம்பெற்றவர்களாய், அவருடன் அனுதினமும் உறவுவைத்தவர்களாய் காணப்படல் வேண்டும். அப்பொழுதுதான் பரலோகம் எங்களுக்குத் திறந்திருக்கும்.
நான் உன்னை விட்டு விலகுவதுமில்லை, உன்னைக் கைவிடுவதுமில்லை யோசு.1:5

1 comment: