மதுவும் அதன் தீமையும்

புளிக்கவைத்த திராட்சைப்பழச் சாறும் வேறு பழங்களின் சாறும் மதுபானம் கொண்ட குடிவகையாகும். பழைய காலங்களில் திராட் சரசம் ஒரு முக்கிய குடிவகையாகும்.யேசுக்கிறிஸ்துவின் உவமை களில் இது முக்கியம் பெறுகிறது அத்துடன் சுவிஷேசங்களிலும் இது கூறப்படுகின்றது.
திராட்ச ரசம் என்று வேதாகமத்தில் கூறப்படுவதெல்லாம்  புளிக்க வைத்த திராட்சரசம், அதில் மதுபானம் அடங்கியுள்ளது.  புளிக்க வைக்காத திராட்சபழச் சாறு திராட்ச ரசம்(வைன்) என்று அழைக் கப்படுவதில்லை. புதிய திராட்சப்பழச் சாறு  மிக அண்மையில் அறு வடையில் கிடைக்கப்பெற்றதாகும். பழைய திராட்சரசம் என்பது கடந்த வருட அறுவடையின் போது கிடைக்கப் பெற்றதாகும். இந்த இரண்டு வகையிலும், பழைய திராட்சரசம் விரும்பப்படுவதற்கான காரணம் அது இனிப்பாகவும் மதுபானம் நிறைந்த்தாகவும் காணப்ப டும் .( லூக். 5:39). புதிய திராட்சரசம் புளிக்கவைக்கப்படுவதால் அது வெறி யூட்டும் தகுதியைப் பெறுகின்றது.( எசாயா. 49:26, ஓசி. 4:11, அப். 2: 13, நியா. 9: 13) ஆனால் புதிய திராட்சரசம்  பழைய திராட் சரசம்போல் அதிகமாக புளிக்கவைக்கப்  பட்டதல்ல (யோவேல் 2:24).வெறியூட்டும் மதுபானமானது திராட்சரசத்திலிருந்து மட்டும்  பெறப்படுவதில்லை ஆனால் அவை வேறு பார்லிபோன்ற வற்றி லிருந்தும் பழவகைகள் மூலம் தயாரிக்கப்படுகின்றது.( நீதி.20:1., ஏசா யா 24: 9) குடித்துவெறித்தல் என்பது ஆதியாகமத்தில் நோவா வைப் பற்றிக்கூறப்பட்டுள்ளது (ஆதி.9:2121. )மதுபானம் நிச்சய மாக வெறி கொள்ளவைக்கும்.(ஏசாயா. 28: 7-8.); மதுபானமும் திராட்சரசமும் குடிக்கவேண்டாம் என்றுலேவியராகம்ம் 10: 9 இல்  கூறப்படுகின்றது
நசரேய விரதமிருப்பவர்கள் திராட்ச ரசத்தையும் மதுபானத்தையும் விலக்க வேண்டும். திராட்சரசத்தின் காடியையும், மற்ற மதுபானத்தின் காடியையும் , திராட்சரசத்தால் செய்த எவ்விதமான பானத்தையும் குடியாமலும், திராட்சப்பழங்களையாவது, திராட் சவற் றல்களையாவது புசியாமல் இருத்தல்வேண்டும்.( எண். 6:3)
சகரியாவின் விண்ணப்பம்கேட்கப்பட்டு தேவதூதன் அவனுக்கு, உன் மனைவி எலிசபேத்து ஒரு குமாரனைப் பெறுவாள். அவனுக்கு யோவான் என்று பெயரிடுவாயாக, அவன் கர்த்தருக்குமுன்பாகப் பெரியவனாயிருப்பான், திராட்சரசமும் மதுவும் குடியான், தன் தாயின் வயிற்றிலிருக்கும்போதே பரிசுத்த ஆவியால் நிரப்பப்பட் டிருப்பான்.(லூக். 1: 12-15)
ஏசாயா .5:11 சாராயத்தை நாடி அதிகாலமே எழுந்து, மதுபானம் தங்களைச்சூடாக்கும்படி  தரித்திருந்து, இருட்டிப் போகுமளவும் குடித்துக் கொண்டேயிருப்பவர்களுக்கு ஐயோ
திராட்ச ரசத்திற்கான ஒத்த பெயர் திராட்சையின் இரத்தமாகும்.(ஆதி. 49:11, ) திராட்சரசம் சிகப்பாக இருக்கிறபடியால்  கர்த்தருடைய இரத்த த்திற்கு ஒப்புடையதாக கர்த்தருடைய இராப்போஜனத்தில் இது என்னு டைய இரத்த்தினாலாகிய உடன்படிக்கை என்னு கூறப்பட் டுள்ளது. மாதுளம்பழத்திலிருந்தும் பழரசம் உண்டாக் கப்படுகிறது.( உன்ன தப்பாட்டு 8:2)
மதுரசம் அதன் நிறத்தைக் கொண்டும், அதன் காலத்தை (வயதை) க்கொண்டும்,  எவ்வகையா மூலப் பொருளைக் கொண்டு தயாரிக் கப்படுகிறது என்பதைக்கொண்டும் வகைப்படுத்தப்படும்.
கெல்போனின் திராட்சைரசம், ( எசேக். 2718), லெபனானின் திராட் சைரசம்,(ஓசி. 14:7) ஆகியவை மிகவும் பிரசித்தி பெற்றவையாகும்.. மதுரசங்கள் வாசனைத்திரவியங்களால்  நறுமணத்தைலம்,தேன், மிளகு, போன்றவற்றால்  நறுமணம் ஊட்டப்படுகின்றன., ( உன்ன தப்பாட்டு 8:2, )யேசு சிலுவையில் தொங்கும் போது கசப்புக்கலந்த மதுரசத்தைக் கொடுத்தார்கள்.( மத். 27: 34,)வெள்ளைப் பேளம் கலந்த மதுரசத்தைக் குடிக்கக் கொடுத்தார்கள்.( மாற்.15:23)

பழைய ஏற்பாட்டுக்காலத்தில் திராட்சரசம் உற்பத்திசெய்தல்
மதுரசம் உற்பத்தியாக்குவதற்கு  திராட்சைப் பழங்களை ஆலை களில் பிழந்து எடுப்பார்கள்.( எண். 18:27, ) இந்த ஆலைகளில் இரண்டு கிடங்குகள் இருக்கும், முதலாவது உயரத்திலும் மற்றயது  தாழ்வாகவும் இருக்கும். இரண்டையும் தொடர்பு படுத்துவதற்கு காண்கள் அமைக்கப்பட்டிருக்கும். ஏறக்குறைய 5-6 நாட்களுக்கு புளிக்கவிட்டபின் கிடங்கிலுள்ள ரசம் எடுக்கப்பட்டு கற்சாடிகளில் சேர்த்துவைக்கப்படும். சிலவேளைகளில் ஆட்டு தோலினால் செய்ய ப்பட்ட துருத்திகளில் (பாத்திரங்களில் )ஊற்றி அதன் வாயை இறுக்க் கட்டிவைப்பார்கள். புதிய ரசம் புளிப்படையும் போது ( நொதிக்கும் போது) இந்தப்பாத்திரங்கள் விரிவடையும்.

திராட்சை ரசப்பாவனை:- நாளாந்த உணவுடன் திரட்சைரசம் உட்கொள்ளப்பட்டது. ( ஆதி. 14:18, நியா.19 19). திராட்சை ரசத்துன் தண்ணீர்கலந்து பருகுவது கிரேக்கருடையதும், யூதர்களுடையதும், ஆரம்ப கிறிஸ்தவர் களுடை யதும் வழக்கமாகவிருந்தது. 1-20 வீதம் என்ற விகிதத்தில் நீர்கலந்து பாவிப்பது வழக்கமாகவிருந்த்து. இது இடங்களுளக்கு இடம் வேறுபடும். கடைசி இராப்போசனத்தில் பாவிக்கப்பட்ட திராட்சரசத்திற்கு மூன்றுபங்கு தண்ணீர்கலந்து பரிமாறப்பட்டது.(ஆராய்சியாளர்கள் இவ்வாறு கூறுகிறார்கள்) இது பஸ்காவில் அடிக்கப்பட்டு சிந்தப்பட்ட ஆட்டுக்குட்டியில் இரத்தத்தை பிரதிபலிக்கின்றது.
திராட்சை ரசம் வைத்திய நோக்கங்களுக்காகவும்  பாவிக்கப்புகிறது. திராட்ச ரசத்துடன்,வெள்ளைப்பேளம ( gall, Myrrh} அல்லது கசப்பு கலந்துகொடுப்பார்கள். அது போதைவஸ்தைப் போல் நோவு தெரியாமல் உடலைவைத்துக் கொள்ளும். அடிபட்ட காயங்களுக்கு திராட்ச ரசமும் எண்ணெய்யும் கலந்து பூசுவார்கள். இது நல்லசமாரியன் பாவித்தார்கள் ( லூக். 10:34) பரிசுத்த பவுல் திமோத்தேயுவுக்கு எழுதும்போது சிறிதளவு திராட்சரசம் பருகும்படியும் அது உணுவு செமிபாட்டைவதற்கு உதவும் என்றும் கூறு கிறார்.(1.திமோ. 5:23).  பழைய ஏற்பாட்டுக் காலத்தில் முடி சூட்டும் வைபவங்களிலும், திருமணவைபவங்ளிலும் திராட்சரசம் பரிமாறப்படும்.
குடிபோதை
பழைய ஏற்பாட்டுக் காலத்தில் குடிப்பழக்கம் வெறுக்கப்பட்டுள்ளது, காரணம் மனிதன் குடித்து தள்ளாடுவதும், சுயநினைவின்றி இருப் பதும், வாந்திபண்ணுவதும், குடிப்பழக்கத்திற்கு அடிமைப்பட்டு ஏழ்மை நிலையடைவதும்,போன்ற விரும்பத் தகாத வாறு வாழு வதால் குடிப்பழக்கம் வெறுக்கப்படுகின்றது.( நீதி.20:1, 21: 17, 23:20, ஏசா.511-12, 29, 19:14, 24:20, 28: 7-8,  எரே 5:27, 48:26 Jer 25:27; 48:26; 51:39, 57; Hos 4:11; ) நெறிபிறழ்வு, விபச்சாரம், ஒழுக்கக்கேடு போன்ற தீயசெயற்பாடுகளில் ஈடுபடுதல்   (Gen 9:20-27 [Noah]; Gen 19:30-38 [Lot]; Amos 2:8; Hab 2:15).மோசேயின் நியாயப்பிரமாணத்தில் குடிப்பழக் கமானது மரணத்திற்கு ஏதவானதாகும்.( உபா.21:20-21 எங்கள் மகனா கிய இவன் அடங்காதவனும் துஷ்டனுமாயிருக்கிறான், எங்கள் சொல்லைக் கேளான்,பெருந்தீனிக்காரனும் குடிகாரனுமாயிருக்கிறான் என்று பட்டணத்து மூப்பரோடு சொல்வார்களாக. அப்பொழுது அவன் சாகும்படி அந்தப்பட்டணத்து மனிதரெல்லாரும் அவன் மேல் கல் லெறி யக்கடவன். இப்படியே தீமையை உன் நடுவிலிருந்து விலக் கிப் போடவேண்டும். இஸ்ரவேலர் எல்லாரும் அதைக் கேட்டுப் பய ப்ப டுவார்களாக.)
தலமைத்துவப் பதவியிலிருப்பவர்கள் குடிப்பழக்கத்தை கையாள க்கூடாது. பழைய ஏற்பாட்டுக்காலத்தில் ராஜாக்கள் குடிப்பது எச்ச ரிக்ப்பட்டுள்ளது.( நீதி.31:4-5 4.) தலைவர்களும் குடிப்பது  தண்ட னை க்குரியது(. Isa 56:11-12; Hos 7:5) ஆசாரியர்களும் நியாயாதிபதிகளும் குடிப்பழக்கத்துற்காக தண்டிக் கப்படுவார்கள், அதனால் அவர்கள் தங்கள் கடமையைச் செய்வதற்கும் தடை விதிக்கப்படுவார்கள். (Isa 28:7). புதிய ஏற்பாட்டின்படி விஷப்மார்கள்,  மூப்பர்கள், டீக்கன், அல்லது ஆசாரியர்கள்போன்ற கிறிஸ்தவ ஊழியர்கள் குடிப்பழக்கம்  உள்ளவர்களாய் இருக்கக்கூடாது. (Titus 2:3-5) (1 Tim 3:2-3, 8; Tit 1:7; 2:2-5). மனிதவாழ்வில் குடிப்பழக்கமானது இரட்சிப்பை புறம்பேதள்ளும். யேசுக்கிறிஸ்து கூறிய உவமைகளில் குடிப்பழக்க முள்ள ஊழியன் பரலோகத்திலிருந்து தள்ளப்படுவான் என்று கூறுகிறது. (Mt 24:45-51, Lk 12:42-48 )
மது அருந்துதல் தவறான நடத்தைகளை ஏற்படுத்தும்
ஆதி.9: 20-29.நோவா பயிரிடுகிறவனாகி, திராட்சைத்தோட்டத்தை நாட்டினான். அவன் திராட்சரசத்தைக்குடித்து,வெறிகொண்டு, தன் கூடாரத்தில் வஸ்திரம் விலகிப்படுத்திருந்தான். அப்பொழுது கானானுக்குத் தகப்பனாகிய காம் தன் தகபனுடைய நிர்வாண த்தைக்கண்டு,வெளியிலிருந்த தன் சகோதரர் இருவருக்கும் அறி வித்தான். அப்பொழுது சேமும் யாப்பேத்தும் ஒருவஸ்திரத்தை எடு த்து தங்கள் இருவருடைய தோள்மேலும் போட்டுக்கொண்டு பின்னி ட்டுவந்து, தங்கள் தகபணுடைய நிர்வாணத்தை மூடினார்கள் .அவர் கள் எதிர்முகமாகப் போகாதபடியினால், தங்கள் தகப்பணுடைய நிர் வா ணத்தைக் காணவில்லை.நோவா திராட்சரசத்தின் வெறிதெளிந்து விழித்தபோது, தன் இளையகுமாரன் தனக்குசெய்ததை அறிந்து கா னான் சபிக்கப்பட்டவன், தன் சகோதர்ரிடத்தில் அடிமைகளுக்கு அடி மை யாயிருப்பான் என்றான். சேமுடைய தேவனாகிய கர்த்தருக்கு ஸ்தோத்திரம் உண்டாவதாக்: கானான் அவனுக்கு அடி மையா யிருப்பான். யாபேத்தை தேவன் விருத்தியாக்குவார்: அவன் சேமு டைய கூடாரங்களில் குடியிரப்பான், கானான் அவனுக்கு  அடிமை யா யிருப்பான் என்றார், ஜலப்பிரளயத்திற்குப்பின்பு நோவா 350 வருஷம் உயிரோடு இருந்தான்.நோவாவின் நாள்களெல்லாம் 950 வருஷம் , அவன் மரித்தான்.

குடிப்பழக்கம் எதிர்மறையான  விளைவுகளுக்கு வழிநடத்திச் செல்லும்.
நோவா, விசுவாச வீரன், குடித்துவெறித்திருந்தான்- கடவுள் பயமில்லாத ஒரு வாழ்வைத் தனது பிள்ளைகளுக்கு காண்பித்தான். இந்தக் கதையானது கடவுள் பயமுள்ள ஒருவர்கூட பாவம் செய்யக்கூடும் என்பதற்காக கூறப்பட்டிருக்கலாம், ஆனால் இந்த அசுத்தமான பழக்கம் அவரது குடும்பத்தைப் பாதிக்கலாம். எல்லா துஷ்ட ஜனங்களும் கொல்லப்பட்ட பின்பும் கூட,நோவினதும் அவரது குடும்பத்தினரதும் இருதயங்களில் கெட்ட சிந்தனைகள் இருப்பதற்கான வாய்ப்புகள் காணப்பட்டுள்ளன. காமுடைய கிண்டல்செய்யும் சுபாவமானது தன்னுடைய தகப்பனுக்கும் கர்த்தருக்கும் பயமற்ற போக்கைக் காண்பிக்கின்றது.
(நீதிமொழிகள் 23: 29-35) ஐயோ! யாருக்கு வேதனை? யாருக்கு துக்கம் ? யாருக்குச் சண்டைகள்?
யாருக்குப் புலம்பல்? யாருக்கு காரணமில்லாத காயங்கள்? யாருக்கு இரத்தம்கலங்கின கண்கள்?   மதுபானம் இருக்கும் இடத்திலே தங்கி த்தரிப்பவர்களுக்கும், கலப்புள்ள சாராயத்தை நாடுகிறவர்களுக்கும் தானே. மதுபானம் இரத்தவர்ணமாயிருந்து, பாத்திரத்தில் பளபளப்பாய்த் தோண்றும்போது, நீ அதைப்பாராதே: அது மெதுவாய் இறங்கும். முடி விலே அது பாம்பைப்போல் கடிக்கும், விரியனைப்போல் தீண்டும். உன் கண்கள் பரஸ்திரீகளை நோக்கும்: உன்உள்ளம் தாமாறானவைக ளைப் பேசும். நீ நடுக்கடலிலே சயனித்திருக்கிற வனைப் போலும், பாய்மரத் தட்டிலே படுத்திருக்கிறவனைப் போலும் இருப்பாய். என்னை அடித் தார்கள், எனக்கு நோக வில்லை: என்னை அறைந்தார்கள் எனக் குச்  சுரணையில்லை, நான் அதைப்பின்னும் தொடர்ந்த்தேட எப்பொ ழுதும் விழிப்பேன் என்பாய்.
குடியினால் கிடைக்கும் நிவாரணம் தற்காலிகமானதேயாகும்.
குடியினால் கிடைக்கும் நிம்மதி தற்காலிகமான தேயாகும். துக்கத் திலிருந்தும் மனவேதனையிலிருந்தும்  உண்மையான நிம்மதி கிடை க் கவேண்டுமாயின் கடவுள் பக்கமாக மனம் திரும் பல் வேண்டும். உன்னை நீ மதுபானத்தினால் அழித்துக் கொள்ளாதே. கர்த்தரிடம் சேர்ந்து நிம்மதியைப் பெற்றுக் கொளவாயாக.
வேதாகமம் மதுப்பழக்கத்தை எச்சரிக்கிறது.
இஸ்ரவேல் திராட்ச ரசம் (மதுபானம்) உற்பத்தியாக்கும் ஒரு நாடா கும். பழைய ஏற்பாட்டுக்காலத்தில் ஆலைகளில் திராட்சைரசம் புரண் டோடுதல் ஆசீர்வாத்த்திற்கான அடையாளமாகும். ( நீதி. 3:10)  ஞானமானது தன் போஜனபந்தியை  திராட்சை ரசத்தை வார்த்து வைத்து ஆயத்தப்படுத்துகிறது, புத்தியீன நோக்கி, எவன் பேதையோ அவன் வந்து பானம்பண்ணக்கடவன் என்று கூறுகிறது ( நீதி. 9:2-5) . ஆனால் பழையஏற்பாட்டு ஆசாரியர்கள் திராட்சைரசத்தின் ஆபத் தைக் குறித்து அவதானமாக இருந்துள்ளார்கள். இது உணர்வுகளை (அறிவை) மந்தமாக்கும், நீதியை மட்டுப்படுத்தும் (நீதி. 31:1-9) இது நிதானத்தை இழக்கச் செய்யும் ( நீதி. 4:17) நல்ல குணங்களை சீரழித் துவிடும்.(நீதி. 21:17)சிற்றின்பப் பிரியன் தரித்திரனாவான், மதுபா னத்தை விரும்புகிறவன் ஐஸுவரியனாவதில்லை. துன்மார்க்கத்திற் கேதுவான  மதுபான வெறி கொள்ளாமல், பரிசுத்த ஆவியினால் நிறைந்த வாழ்வு வாழுதல்வேண்டும். ( எபேசியர் 5:18)
மதுபானத்திற்குப் பதிலாக வேதாகமம்  மாற்று வழி கூறுகிறது.
பரிசுத்த பவுல் திராட்ச ரசத்தால் வெறிகொள்வதை விரும்பவில்லை.  இது தற்காலிகமான உற்சாகத்தை தருகிறது. ஆனால் ஆவியில் நிறைந்தால் இது நீடித்த சந்தோஷத்தைத் தருகின்றது. திராட்ச ரசத்தால் வெறிகொள்வது தனிப்பட்ட ஆசையாகும்,இது பழையகாலத்து முறையுமாகும். கிறிஸ்துவுக்குள் வாழ்வதனால் எங்களுக்கு மிகுந்த சந்தோஷம் கிடைக்கும், சோர்வு மனப்பாண்மை, சலிப்புத் தன்மை,நெருக்கடி நிலை, என்பவற்றிலிருந்து மீட்சிபெறுவதற்கும் மருந்தாக இயேசு இருக்கின்றார். நாம் பரிசுத்த ஆவியில் நிறைந்து வாழ்வதால் எங்கள் வாழ்வை அவர் வழிநடத்திச் செல்வார்.எங்களுடைய செயற்பாடுகளில்  மதுபானம் ஆதிக்கம் செலுத்துவதனால் குடிப்பழக்கம் தவறானதாகும்.
நான் மதுப்பழக்கத்திற்கு அடிமையாகி எனது குடும்பத்தை சீரழித் துவிட்டேன், எனக்கு ஆண்டவர் உதவிசெய்வாரா? என்று. பலர் அங்கலாய்ப்பதை நாம் பார்த்திரக்கிறோம் ஒருவன் கிறிஸ்துவைப் பின்பற்றிவந்தால் அவன் புது சிருஷ்டி யாகிறான், அவனுடைய பழைய பழக்கவழக்கங்கள் யாவும் அற்றுப் போகின்றன, எல்லாம் புதிதாகின.( 2.கொரி. 5:17) மனுஷருக்கு நேரி டுகிற சோதனையே யல்லாமல் வேறே சோதனை உங்களுக்கு நேரிடு வதில்லை, தேவன் உண்மையுள்ளவராயிருக்கிறார், உங்கள் திராணிக்கு மேலாக நீங்கள் சோதிக்கப்படுகிறதற்கு அவர் இடகொடாமல்,சோதனையைத் தாங்கத்தக்கதாக,சோதனையோடுகூட அதற்குத் தப்பிக்கொள்ளும் போக்கையும் உண்டாக்குவார். ( 1கொரி. 10: 13)
மதுப்பழக்கத்திற்கு அடிமையானவர்கள் கர்த்தரை நோக்கி கூப்பிட்டால் அவர் உதவிசெய்ய ஆயத்தமாயிருக்கிறார்.
மது குடிபானம் எதுவாயினம் போதையை உண்டுபண்ணும். மதுபானம் பாவிப்பது ஆசாரியர்களுக்கு தடைசெய்யப்பட்டுள்ளது.(லேவி. 10:9) நசரேய விரதங்காப்பவர்கள் திராட்ச ரசத்தையும் மதுபானத்தையும் விலகக் கடவர்கள்( எண். 6:3) திராட்ச ரசம் குடிப்பது ராஜாக்களுக்கு தகுதியல்ல( நீதி. 31:4) சாம்சனுடைய தாயாருக்கு கர்த்தருடைய தூதன்  சொன்னார் இதோ பிள்ளைபெறாத மலடியான  நீ கர்பம் தரித்து , ஒரு குமாரனைப் பெறுவாய், ஆதலால் நீ திராட்ச ரசமும் மதுபானமும் குடியாதபடிக்கும் தீட்டானது ஒன்றும் புசியாதபடிக்கும் எசலரிக்கையாயிரு.
வேதாகமத்தில் மதுவினால் சீர்கெட் சந்தர்ப்பங்களைக்கவனிப் போம்
ஆதி. 19:31.
லோத்துவினது குடும்பத்தைக் கவனித்தால் கர்த்தருடைய தூதர்கள்  லோத்து குடும்பத்தை சோதோம் குமாராவிலிருந்து காப்பாற்றினார்கள். ஆனால் திரும்பிப் பார்க்காமல் ஓடுங்கள் என்ற கட்டளைளை மீறித் திரும்பிப்  பார்த்தபடியால் லோத்துவின்  மனைவி உப்புத்தூனான மாறினார்கள். அதன் பின்பு இரண்டு பெண்பிள்ளைகளும் லோத்துவும் தனிமையில் குடியிருந்தார்கள். அந்த நாட்களில் அங்குவேறு  ஆண்கள் இல்லாதபடியால் தனது தகப்பனுக்கு குடிக்கக் கொடுத்து மயங்கவைத்து தகப்பனுடன் விபச்சாரம் செய்து குழந்தைகளைப் பெற்றுக் கொண்டார்கள். அப்படிப் பிறந்தவர்கள்தான் மாவோப்பியரும்  அம்மோனியர்களும்.
இங்கு நான் குறிப்பிட விரும்புவது என்னவென்றால்
 1. அந்தப்பெண்பிள்ளைகளிடம் விபச்சார ஆசை இருந்தது.
 2. குடிப்பழக்கம் லோத்துவிடம் இருந்தது.
 3. அவர்கள் இடம்பெயர்ந்த வேளைகளிலும்  குடிவகை அவர்கள்வசம் இருந்தது.
 4. குடிப்பழக்கம் விபச்சாரத்தை தனது தகப்பனிடமே நிறைவேற்றியது.
குடிவெறியின் மயக்கத்தில் ஜனங்கள்செய்த கொடுமைகளைப் பார்ப்போம். (ஏசாயா 5:20-25 )
 1. தீமையை நன்மையென்றும், நன்மையைத் தீமையென்றும் சொல்லித்திரிந்தார்கள்.
 2. இருளை வெளிச்சமும்,வெளிச்சத்தை இருளுமாய்ப் பாவித்தார்கள்.
 3. கசப்பைத் தித்திப்பும், தித்திப்பைக் கசப்புமென்று சாதித்தார்கள்
 4. தங்கள் பார்வைக்கு ஞானிகளும், தங்கள் எண்ணெத்துக்குப் புத்திமான்களுமாய் இருந்தார்கள்.
 5. சாராயத்தைக் குடிக்க வீர்ரும், மதுவைக் கலந்துவைக்கப் பராக்கிரமசாலிகளாயிருந்தார்கள்.
 6. பரிதானத்திற்காகக் குற்றவாளிளை நீதிமானாகத் தீர்த்து, நீதிமான்களின் நியாயத்தை அவனுக்கு விரோதமாய்ப் புரட்டினார்கள்.
ஆசாரியனும் தீர்க்கதரிசிகளும் மதுபானத்திற்கு அடிமையானதினால் ஏற்பட்ட தீமைகளைப் பார்ப்போம்.( ஏசாயா 28:7-8)
 1. திராட்சைரசத்தால் மயங்கினார்கள்.
 2. மதுபானத்தால் வழிதப்பிப் போனார்கள்.
 3. தீர்க்கதரிசனங்களை பிழையாக்க்கூறினார்கள்.
 4. நியாயம் தீர்ப்பதில் இடறினார்கள்.
 5. போஜனபீடங்களெல்லாம் வாந்திபண்ணினார்கள்.
இவ்வாறான தீமைகளை நடப்பிப்பவர்களுக்கு ஜயோ! என்று வேதம் கூறுகிறது.அதனால் அவர்களுக்கு ஏற்படப் போகும் தீமைகளைப் பார்ப்போம்.( ஏசாயா 5: 20-24)
 1. இதினிமித்தம் அக்கிஜுவாலை வைக்கோலைப்போல்  பட்சிப்பது போலவும்,
 2. செத்தையானது நெருப்புக்கு இரையாகி எரிந்து போவது போலவும்,
 3. அவர்கள் வேர் வாடி அவர்கள் துளிர் தூசியைப் போல் பறந்து போகும்: அவர்கள்சேனைகளின் கர்த்தருடைய வேதத்தை வெறுத்து,
 4. இஸ்ரவேலிலுள்ள  பரிசுத்தரின் வசனத்தஅசட்டைபண்ணினார்களே
 5. . ஆகையால் கர்த்தருடைய கோபம் ஜனங்களுக்கு விரோதமாக மூண்டது:
 6. அவர் தமதுகையை  அவர்களுக்கு விரோதமாய் நீட்டி, பர்வதங்கள் அதிரத் தக்கதாயும், அவர்கள் பிணங்கள் நடுவில் குப்பைபோலாகத் தக்கதாயும், அவர்களை அடித்தார்:
 7. இவை எல்லாவற்றிலும் அவருடைய கோபம் ஆறாமல், இன்னும் அவருடைய கை நீட்டினபடியே  இருக்கிறது.
ஆபகூக்.2:  15-20.
 1. தன்தோழனுக்கு குடிக்கக் கொடுத்து  அவர்களி நிர்வாணங்களைப் பார்கிறார்கள்.
 2. ஊமையான தெய்வங்களை உண்டுபண்ணுகிறார்கள் இப்படி ப்பட்ட வர்களுக்கு  ஐயோ, இலச்சையடைவாய், என்று ஆண்டவர் சொல்லுகிறார்.
ஏசாயா 5:11.—15.
 1. அதிகாலமே எழுந்து , மதுபானம் தங்களைச் சூடாக்கும்படி தரித்திருந்து, இருட்டிப்போகும்மட்டும் குடித்துக் கொண்டிருப்பவர்களுக்கு ஜயோ!
 2. வாத்தியக்கருவிகளை வாசித்துக் கொண்டே மதுபானத்தை வைத்து  விருந்து கொண்டாடுகின்றார்கள்.
 3. இவர்கள் கர்த்தரின் வார்த்தைகளை நினைப்பதுமில்லை,
 4. இதனால் சிறைப்பட்டுப் போகிறார்கள், பட்டினியால் தொய்ந்து போகிறார்கள், தாகத்தால் நா வறண்டுபோகிறார்கள்.
 5. இதனால் பாதாளத்திற்குரியவர்களாய் மாறுகிறார்கள்.
ஆசாரியர்கள் மதுபானம் அருந்தக் கூடாது (லேவி 10: 8-11, எசே. 44: 21-24)
கர்த்தர் ஆரோனை நோக்கி, நீயும் உன்னோடேகூட உன் குமாரரும் சாகாதிருக்க வேண்டுமானால், ஆசரிப்புக் கூடாரத்திற்குள் பிரவேசிக்கிற போது திராட்ச ரசத்தையும் மதுவையும் குடிக்க வேண்டாம். மேசேயின் பிரமாணங்களைப் போதிப்பதற்கான உங்கள் தலைமுறைதோறும் நித்திய கட்டளையாயிருக்கிறது என்றார்.

கிறிஸ்தவர்களாகி நாம் கிறிஸ்துவுக்கு உடன் வேலையாள்களாக இருக்கிறோம். ஆகவே நாம் மற்றவர்களுக்கு முன்மாதிரியாக வாழவேண்டியவர்கள். நாம் மது பாவனையாலும் புகைபிடித்தலாலும் எங்கள் இருதயத்தை அசுத்தப்படுத்தக்கூடாது. ஏனெனில் நாம் தேவனுடைய ஆலயமாக இருக்கிறோம். பரிசுத்த ஆவியின்வடிவில் தேவன் எங்களுக்குள் வாசமாக இருக்கிறார்.அவர் எங்களுக்கு ஆலோசகராகவும் வழிகாட்டியாகவும் தேற்றரவாளனுமாகவிருந்து எங்களை வழிநடத்தி வருகிறார்.ஆகவே மதுபானம் அருந்துவதாலும் புகைபிடிப்பதாலும் அவரைத்துக்கப்படுத்தாமலும் எங்களை விட்டு வெளியேறாமலும் பாதுகாப்போம்.
கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக

1 comment: